சிலைய எடுப்பேனு சொன்னா தலைய எடுப்பேனு வராங்களே... ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
Recommended Video

சென்னை : திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதற்கும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டு பிரச்னையில் சிக்கியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. எச். ராஜாவின் இந்த கருத்துக்கு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதே போன்று சமூக வலைதளங்களில் எச். ராஜாவின் கருத்துக்கு விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். எச். ராஜாவின் பெரியார் சிலை கருத்து முதல் பதிவை அழித்தது வரை பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் சில தேர்வுகள் :
|
கொள்கைகள் அழியாது
இன்று திரிபுராவில் லெனின் சிலை நீக்கப்பட்டது போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை நீக்கப்படும் என்று சொல்கிறார் எச். ராஜா. அட முட்டாள்களா ! சிலை என்பது உயிரற்றது..அவரின் கருத்துகளும் கொள்கைகளும் சாகா வரம்பெற்றவை..அதை ஆட்டவோ அசைக்கவோ முடியாது ! என்று கருத்து பதிவிட்டுள்ளார் இவர்.
|
ராஜா பெரியார் சிலையை உடைத்த போது
ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொல்கிறார். அவர் பெரியார் சிலையை உடைத்த போது என்று ஒரு அனிமேஷனை ட்வீட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
நோட்டா ராஜாவுக்கு சவால்
இன்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் பெரியார் சிலை நீக்கப்படும் என்று எச். ராஜா மிரட்டுகிறார். ஆம்பளன்னா என்ன தாண்டி கிழவன் சிலைய தொடுங்கடா பாப்போம் என்று நோட்டா சொல்வது போல கருத்து பதிந்துள்ளார் இந்த வலைபதிவர்.
|
தாமரை எப்படி மலரும்?
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச்.ராஜா கூறியது அவரது சொந்த கருத்து என்று தமிழிசை கூறுகிறார். ஒன்னு கண்டனம் சொல்லுங்க இல்லன்னா ஆதரவு தெரிவியுங்கள் ரெண்டாகட்டமா இருந்தா தாமரை எப்படி மலரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இவர்.
|
அமெரிக்காவில் ஏன் காந்தி சிலை?
காந்தி யார் ? அவருக்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு? ஏன் அங்கே இவர் சிலை இருக்க வேண்டுமென ராஜா விளக்கிச் சொல்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் இவர்.
|
தலைய எடுப்பனு வராங்க
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற தனது கருத்தை பேஸ்புக் பக்கத்திலிருந்து ஹெச்.ராஜா நீக்கினார் என செய்திகள் வெளிவருகின்றன. இதற்கு எச். ராஜாவின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும். சிலை எடுப்பேன்னு சொன்னா, நம்ம தலைய எடுப்பேன்னு வரானுங்க. இப்போதைக்கு நமக்கு தலை தான் முக்கியம் என்று கேலி செய்துள்ளார் இவர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications