என்னை கட்டிப்பிடிக்க கூட ஆள் இல்லை என்னை விட்டு போகாதேன்னு கெஞ்சுது இந்தப்புள்ள!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீயிடம் தன்னை கட்டிப்பிடிக்கக்கூட ஆள் இல்லை என ஜல்லிக்கட்டு போராளி ஜூலி கெஞ்சுவதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமான ஜூலி இதன்மூலம் இன்னும் பிரபலமாகிவிட்டார்.

பரபரப்பை கிளப்பி விட்டு பணம் சம்பாதிப்பதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவியே. இந்த தொலைக்காட்சி பல மொழிகளில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசனை கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் எதிர்ப்பார்த்த அளவுக்கு போகாத இந்த நிகழ்ச்சி தற்போது தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தது போன்றே பீக்கில் செல்ல தொடங்கியுள்ளது. காரணம் ஜல்லிக்கட்டு போராளியான ஜூலி, நடிகர் ஸ்ரீயிடம் பேசிய பேச்சுதான்.

தன்னை கட்டிப்பிடிக்கக்கூட ஆள் இல்லை என்று அவர் ஸ்ரீயிடம் கூறியது சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அடுத்த 100 நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப்போகிறமு என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் தூண்டிவிட்டுள்ளது விஜய் டிவி. இதனை கலாய்த்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிர்ச்சியை தந்தால் நல்லது

அட்லீஸ்ட் இந்த #பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழர்களுக்கு கலாச்சார அதிர்ச்சியை தந்தால் நல்லது. அதிர்ச்சி தேவை தமிழர்களுக்கு என்கிறார் இந்த வலைஞர்..

என்னங்கடா நடக்குது

என்னங்கடா நடக்குது இங்க... என கேட்கிறார் இந்த நெட்டிசன்

ட்விட்டர்வாசிகளுக்கு ஜாலி

இனி அடுத்த நூறு நாளைக்கு அவனுகளுக்கு ஜாலியோ இல்லயோ ட்விட்டர்வாசிகளுக்கு ஜாலி டெய்லி எதாவது வச்சி செஞ்சிட்டே இருக்க போறாங்க என்கிறார் இந்த வலைஞர்

டெம்ப்லட் கிடைக்கும்

மீம் கிரியேட்டர்ஸ்க்கு தொக்கா டெம்ப்லட் கிடைக்கும்.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்

குழந்தையோடதான்..

கடைசில நூறு நாள் கழிச்சி வெளிய வரும் போது எல்லாரும் கைல குழந்தையோட தான் வெளிய வர போகுதுங்க என்கிறார் இந்த நெட்டிசன்...

தெரியாத மாதிரி நடிங்கடா..

தெரியாத மாதிரி நடிங்கடா.. நடிக்கிறது பெப்பரப்பேன்னு தெரியுது.. என கலாய்க்கிறார் எந்த வலைஞர்

லொட லொடன்னு..

ஜூலி லொட லொடன்னு பேசிக்கிட்டு இருக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்..

கட்டிப்பிடிக்க கூட ஆள் இல்லை

என்னை கட்டிப்பிடிக்க கூட ஆள் இல்லை என்னை விட்டு போகாதேன்னு மாநகரம் ஹீரோகிட்ட கெஞ்சுது இந்தப்புள்ள... என்கிறார் இந்த வலைஞர்..

நல்ல ஊக்கமற்றது

ஆர்வலர்களுக்கு ஒல நல்ல ஊக்கமற்றது இது. கருத்து சுதந்திரம் என்பது புகழுக்கும் பணம் சம்பாதிக்கவும் அல்ல.. என்கிறார் இந்த நெட்டிசன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun on Juli in BigBoss program on Vijay tv. Juli became familier in the protest of Jallikattu. She has participated in the BigBoss show.
Please Wait while comments are loading...