போன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பக்கோடா வேலைக்கும் இப்போ ஆப்பு...வீடியோ

  சென்னை: பக்கோடா விற்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

  பட்ஜெட்டுக்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனை வேலை வாய்ப்பாக எடுத்துக்கொள்ள முடியாதா என்றார்.

  இந்நிலையில் வேலையில்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என பாஜக தேசிய செயலாளர் தெரிவித்தார். இதனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

  தேசிய ஸ்நாக்ஸ்- பக்கோடா

  தேசிய பானம் - டீ, தேசிய உடை - காவி ஜிப்பா, தேசிய ஸ்நாக்ஸ்- பக்கோடா, தேசிய விலங்கு- பசு, தேசிய நிறம் - காவி, தேசிய மலர்- தாமரை என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்

  பக்கோடா போட்டு விற்கலாமா?

  சவுதியில் இருக்கலாமா? இல்லை
  இந்தியாவிற்கு போய் #மோடி_பக்கோடா போட்டு விற்கலாமா? என யோசனையில் இருக்கிறார் இந்த வலைஞர்

  எல்லாம் திருந்திட்டாங்களா

  அடப்பாவிகளா, எல்லாம் திருந்திட்டாங்களா. ஒரு வேளை பக்கோடா விக்க ஆரம்பிச்சிருப்பாங்களோ.. என்கிறது இந்த டிவிட்

  பக்கோடா பரிதாபங்கள்

  சமூகம் பெரிய இடம் ....
  #பக்கோடா_பரிதாபங்கள் என்கிறது இந்த மீம்..

  பக்கோடா விற்க

  காங்கிரஸ் காலத்தில்
  டீ விற்றவர் பிரதமராக வளர முடிந்தது...!!
  மோடி காலத்தில் BE படித்தவருக்கு பக்கோடா விற்க ஆலோசனை வழங்கப்படுகிறது.. என்கிறது இந்த டிவிட்

  வேலைவாய்ப்பின்மை குறையட்டும்

  ஊர்ல இருக்கிற அம்புட்டு முகநூல் என்ஜினீர்ஸ், பட்டதாரிகள் சேர்ந்து பக்கோடா சுட்டு பிரதமருக்கு பார்சல் பண்ணுங்க பா, நாட்டுல வேலைவாய்ப்பின்மை குறையட்டும் பா. என்கிறது இந்த டிவிட்

  எங்களை நம்பாதீங்க..

  பக்கோடா வித்தாவது பொழைச்சுக்கோங்க இனி எங்களை வேலைவாய்ப்புக்காக நம்பாதிங்கன்னு சொல்றார் அமீத் (எ)இடிஅமீன் என கலாய்க்கிறது இந்த டிவிட்

  பக்கோடா விக்கிறவன்

  போன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.,
  இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்.! என்கிறார் இந்த நெட்டிசன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of PM Modi and Amit shah's Pakkoda statement.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற