போர் களத்தில் இல்லாதவர்கள் போர் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது....!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களிடம் பேசியதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ரஜினிகாந்த் நன்றாக நடிக்கிறார் என்றும் வலைதளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினி காந்த் கடந்த 4 நாட்களாக தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இறுதி நாளான இன்று ரஜினி தனது ரசிகர்களிடம் உரையாற்றினார்.

அப்போது ஸ்டாலின், அன்புமணி, சீமான், திருமாவளவன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் ரசிகர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனை வைத்து ரஜினியை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

சோ மட்டுமா?

சோ மட்டுமா? ஜெ அவர்களும் சொன்னார்கள்.. மற்றும் அப்துல்கலாமும் சொன்னார்.. ஸ்டாலின் சிறப்பாக செயல்படக்கூடியவர் என

எம்ஜிஆர் சிவாஜி..

எம்ஜிஆர்,சிவாஜி நடித்திருக்கிறதைப் பார்த்திருக்கேன் என ரஜினியை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

அவரு சொன்னதுவேற

அவரு சொன்னது போர் அடிச்சா பாத்துக்களாமுன்னு.. அதை நீங்கள் போர் என தவறாக புரிந்து கொண்டால் அதற்கு ரஜினி பொறுப்பல்ல என்கிறார் இந்த வலைஞர்..

வியப்பாக உள்ளது

போர் களத்தில் இல்லாதவர்கள் போர் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்..

போருக்கு வருவீர்களா

போராட்டத்துக்கே வராத நீங்கள் போருக்கு வருவீர்களா தலைவா என கேட்கிறார் இந்த வலைஞர்...

என்ன நீங்களே கூப்டிறீங்க

ஏன் வீட்டுக்கு ரைடுக்கு வாங்க...என்ன நீங்களே கூப்டிறீங்க... இனி நான் தான் கூட்டனும்.. என கலாய்க்கிறது இந்த மீம்...

ஆஹான்..

சீமான் ஒரு போராளி என ரஜினி கூறியதற்கு ரியாக்ஷனாக இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Rajinikanth. they said Rajinikanth is acting.
Please Wait while comments are loading...