ஆமா பக்கத்து வீட்டு வைபை சரியா கனெக்ட் ஆக மாட்டேங்குது சிஸ்டம் சரி பண்ணனும்..நெட்டிசன்ஸ் அதகளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனை வைத்து டிவிட்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று போயஸ் தோட்டத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரே கவுன்ட்டரும் போட்டுட்டார்

கமலுடன் இணைந்து பணியாற்றுவேனா காலம்தான் சொல்லும் நாடாளுமன்ற தேர்தல் போட்டி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்;
தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும். முதலில் வெளிவருவது 2.O திரைப்படமா இல்ல காலா'வா என்பது 2 நாட்களில் தெரியவரும் - ரஜினி
#அவரே கவுன்ட்டரும் போட்டுட்டார் என்கிறார் இந்த வலைஞர்

சொல்லி பார்க்கிறது

தமிழகத்தில் தான் சிஸ்டம் சரியில்லை என்று சொன்னேன்-ரஜினி
நீங்கதான் தைரியமான ஆளாச்சே ஏன் இந்தியான்னு சொல்லி பார்க்கிறது??? என்கிறது இந்த டிவிட்

எப்ப சார் வரீங்க

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்-ரஜினி
/ ஹலோ... சூப்பர் ஸ்டார் ரஜினிங்களா எங்க வீட்ல வின்டோஸ் சிஸ்டம் ஒன்னு சரியில்லாம இருக்கு எப்ப சார் வரீங்க சரி பன்ன... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

இவரை விட்டு போகலையோ?

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் - ரஜினி
/ரோபோ, 2.0 ஆகிய படங்களில் பேசிய வசனங்களின் தாக்கம் இவரை விட்டு போகலையோ? என கேட்கிறார் இந்த வலைஞர்

வைபை சரியா கனெக்ட் ஆகல

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்-ரஜினி
//ஆமா பக்கத்து வீட்டு வைபை சரியா கனெக்ட் ஆக மாட்டுது சிஸ்டம் சரி பண்ணனும். என்கிறார் இந்த நெட்டிசன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Rajinikanth's correct the system statement on social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற