நோயாளி கணவரை பார்க்க வர மனைவிக்கு வான வேடிக்கை வரவேற்பு கொடுத்த ஒரே கோஷ்டி!

சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு வாண வேடிக்கையோடு வரவேற்பு கொடுத்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு வாண வேடிக்கையோடு வரவேற்பு கொடுத்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா , உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைசெய்துள்ள தனது கணவரை காண 5 நாள் பரோலில் வெளியே வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு நேற்று வான வேடிக்கையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று கணவர் நடராஜன் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போதும் சசிகலாவுக்கு செல்லும் வழியெல்லாம் உற்சாக வரவேற்பு அளிப்பட்டது. இதனை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

ஜாலியா இருந்திருப்பாங்க

உள்ளேயே இருந்துருந்தாலும் ஷாப்பிங் கீப்பிங் பண்ணிட்டு ஜாலியா இருந்துருப்பாங்க பரோல்னு கூடிட்டி வந்து இப்படி கொடுமை பண்ணுறேலே? என்கிறார் இந்த நெட்டிசன்

குற்றவாளிக்கு வரவேற்பு

ஒரு குற்றவாளிக்கு பூப்போட்டு, கையெடுத்து கும்பிட்டு, காலுக்கு விழுந்தே பழகிட்டானுக அடிமைகள்.. கொடூரம்டா.. #சசிகலா.. என்கிறார் இந்த வலைஞர்

பொறுப்பே இல்லை

வர வர இந்த தமிழ் செய்தி சேனல்களுக்கு பொறுப்பே இல்லை #சசிகலா கார்ல வருவதையும் லைவா காட்டல #சமந்தா கல்யாணம் ஆகுறதையும் லைவா காட்டல.. என்கிறார் இந்த நெட்டிசன்

மறுபடியும் ஜெயில்

#சசிகலா இப்போ ஜெ சமாதியில் சத்தியம் பண்ணினால்,சமாதியை அடிச்சு உடைச்சிட்டாங்கன்னு மறுபடியும் ஜெயில்ல போட்டுருவாங்க
டீ குடிச்சவன புடிச்ச மாதிரி என்கிறது இந்த டிவிட்

பாவம் அந்தம்மா

பாவம் அந்தம்மா..... ஹோட்டல் பெயர்ல மட்டும்தான் ஆனந்தம் இருக்கு.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்

பிரபலம் ஆகியிருக்கமாட்டார்...

#சசிகலா முதல்வராக வந்திருந்தால்கூட இந்தளவுக்கு பிரபலம் ஆகியிருக்கமாட்டார்...

தினகரன் கோஷ்டிதான்...!!

நோயாளியாக இருக்கிற கணவரை பார்க்க வர பொண்டாட்டிக்கு வான வேடிக்கையோட வரவேற்பு கொடுத்த ஒரே கரகாட்ட கோஷ்டி நம்ம தினகரன் கோஷ்டிதான்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+