அய்யோ.. இந்த பட்டியலில் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயர் இல்லையே.. வேதனையில் நெட்டிசன்ஸ்!
அதிமுகவின் புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் செல்லூர் ராஜு பெயர் இல்லை என நெட்டிசன்கள் நொந்து கொள்கின்றனர்.
சென்னை: அதிமுகவின் புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் செல்லூர் ராஜு பெயர் இல்லை என நெட்டிசன்கள் நொந்து கொள்கின்றனர்.
அதிமுக செய்தித்தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன் உள்ளிட்ட 12 பேரை நியமிக்கப்பட்டுள்ளனர். நமது எம்.ஜி.ஆர். ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட மறுத்து அழகுராஜும் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் தீரன் என்கிற ஏ.ராஜேந்திரன், கே.சி.பழனிசாமி, பாபு முருகவேல், மகேஸ்வரி, ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், கோவை செல்வராஜ் ஆகியோரும் செய்திதொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பெயர் இல்லை எனக்கூறி நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். அவற்றில் சில..
|
செல்லூர் ராஜூ தற்கொலை படை!
வன்மையாக கண்டிக்கிறோம்..
அதிமுக அறிவித்துள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில்
"அறிவுலக மேதை"செல்லூர் ராஜூ பெயர் விடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்..!!
அறிவுலக மேதை செல்லூர் ராஜூ தற்கொலை படை!
|
அவர்கள் பெயர் இல்லை
அதிமுகவில் 12 செய்தி தொடர்பாளர்கள் நியமனம்: கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க வேறு யாருக்கும் உரிமை இல்லை என அறிவிப்பு #
இந்த லிஸ்டில் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் பேர் இல்லாததை வன்மையா கண்டிக்கிறேன்.
|
யாரை வைச்சி செய்வாரோ!..
அதிமுக செய்தி தொடர்பாளர்கள்
12 பேர். ஆவடிகுமாருக்கு ஆப்பு.
சகோதரர் பிரசன்னா இனிமேல் யாரை வைச்சி செய்வாரோ!...
|
முக்கியம் தலைவா
தலைவா ... நாம் தொலைக்காட்சி ஒன்று
ஆரம்பிக்க வேண்டும்...
செய்தி தொடர்பாளர்கள் மிக மிக முக்கியம் தலைவா ...












Click it and Unblock the Notifications