கடைசி ஓவரில் கன்னட பவுலரை அடித்து காவிரிக்கு பழிவாங்கிட்டோம்ல.. தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கடைசி ஓவரில் கன்னட பவுலரை அடித்து காவிரிக்கு பழி வாங்கிட்டோம்ல- வீடியோ

  சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சேப்பாக்கத்தில் 200 ரன்களை சேஸ் செய்து அசத்தல் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ஷாக் கொடுத்தது.

  இதையடுத்து நேற்று இரவு முதல், நெட்டிசன்கள் சிஎஸ்கே அணியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். 2 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய இரு த்ரில் போட்டிகளிலும் சிங்கமாக கர்ஜித்த சிஎஸ்கே அணியை போற்றி புகழ்ந்து வருகிறார்கள்.

  வயதானவர்கள் அணி என்றெல்லாம் வக்கனை பேசியவர்கள் வாய் உடைக்கப்பட்டுவிட்டதாக கொக்கரிக்கிறார்கள், டோணியின் அன்பு தம்பிகள். இதோ சில கலக்கல் டுவிட்ஸ்.

  வரிசையாக வரவும்

  இதோ கொல்கத்தாவும் அடி பணிந்தாயிற்று இனி வரிசைல வாங்கடா #CSK

  ரஸலுக்கு பதிலடி

  தோனி நவ்: எங்ககிட்டயும் சிக்ஸ் அடிக்க ஆளு இருக்குப்பு

  தினேஷ் கார்த்திக்கே சிஎஸ்கே ரசிகர்தான்

  தினேஷ்கார்த்திக்கே இந்நேரம் ட்ரெஸ்ஸிங் ரூம்ல போய் சட்டய கழட்டிட்டு, சிஎஸ்கே டா னு கத்திட்டு இருப்பாரு. ஹேட்டர்ஸ் ஏன் அனத்திட்டு இருக்கானுக என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

  வினய்குமார்

  சென்னை கடைசி ஓவரில் 17 ரன்களை அடித்து வென்றுள்ளது. அதுவும் கன்னடர் (வினய்குமார் கர்நாடகத்துக்காரர்) ஓவரில் என கூறி காவிரிக்கும் இதற்கும் கனெக்ஷன் கொடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

  சென்னையிடம் வாங்கியோர்

  சென்னையிடம் வரிசையாக அடி வாங்கியோர் நிலை இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்த மீம். என்ன ரசிகர்களே உங்கள் அணி பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வந்துவிட்டதில் குஷிதானே.

  இதில் இன்னொரு விஷயத்தை கவனிச்சீங்களா? என்னதான் காவிரி வாரியம் அமைக்காமல் பிரதமர் மோடி காலம் தாழ்த்தி தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடுடன் இருந்தாலும், அவரின் குஜராத் மண்ணை சேர்ந்த ஜடேஜா, சிக்சர் விளாசி, சென்னை சூப்பர் கிங்ஸ்சை வெற்றி பெற வைத்துவிட்டார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens praising Chennai Super Kings for its continue performance in the IPL.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற