ஆமா இப்போ நான் ஹரித்வாரில் இருந்து தான் பேசுறேன்.. செங்கோட்டையனை வைத்து சிரிப்பு காட்டும் மீம்ஸ்
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மூத்த தலைவராக இருக்கும் செங்கோட்டையன் இப்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று அவர் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதையடுத்து அவரது கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.
அதிமுக அமைப்பு செயலாளர் பதவி மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை செங்கோட்டையனிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு விமானத்தில் பறந்த செங்கோட்டையன் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பிய செங்கோட்டையன், அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவாதித்தேன். அதிமுக வலிமை பெற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் பணிக்காக தொடர்ந்து போராடுவேன்'' என்றார். மேலும் அவர் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அடுத்தக்கட்ட நகர்வு பற்றி அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். அவர் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் செங்கோட்டையனின் இந்த நகர்வு அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது. இதற்கிடையே தான் ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டெல்லியில் அமித்ஷாவை, செங்கோட்டையன் சந்தித்து பேசியது உள்பட சமீபத்திய அவரது நடவடிக்கை தொடர்பான நெட்டிசன்கள் இணையதளங்களில் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
10 நாள் கெடுவால் பதவி நீக்கம்
அதேபோல் இன்னொரு மீம்ஸ் இணையதளத்தில் உலா வருகிறது. பிரிந்தவர்களை சேர்க்க செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தது மற்றும் கெடு விதித்த செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவியில் இருந்து நீக்கியதை ஒப்பிட்டு இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

10 நாள் கெடு விதித்த உங்களை 10 மணிநேரத்தில் கட்சி பதவியில் இருந்து நீக்கிவிட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை பார்த்து சொல்வது போல் அந்த மீம்ஸ் அமைந்துள்ளது.
ஹரித்வாரில் இருந்து தான் பேசுறேன்
அந்த வகையில் நடிகர் சூர்யாவின் ‛உன்னை நினைத்து' திரைப்படத்தில் இயக்குநரும், நடிகருமான ஆர் சுந்தராஜன் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அவர் எஸ்டிடி பூத்தில் இருந்து போனில் ஒருவரிடம், சிங்கப்பூரில் இருந்து பேசுவதாக ஏமாற்றுவார்.

அந்த போட்டோவை பகிர்ந்து ‛ஆமா, ஹரித்வாரில் இருந்து தான் பேசுறேன்' என்று செங்கோட்டையனை கிண்டல் செய்துள்ளனர்.
நம்புனா தான் சோறு
அதேபோல், செங்கோட்டையன் இன்று அறிக்கை வெளியிட்டார். அதில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து அந்த அறிக்கை அமைந்து இருந்தது. அதில், பிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்து இருந்தார் செங்கோட்டையன். உலக தலைவர்களின் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்திய திருநாட்டின் இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரால் முன்மொழியப்பட்டர் என்று கூறியிருந்தார்.

இதற்கு கலகலப்பு திரைப்படத்தில் நடிகர் விமலிடம், நடிகர் சந்தானம் ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள். அப்போது சந்தானம், தனது குடும்ப வரலாற்றை கூறுவார். அதை கேட்கும் விமல், ‛‛இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு'' என கேள்வி கேட்பார். அதற்கு சந்தானம், ‛‛நானும் ஆரம்பத்துல நம்பல.. நம்புனா தான் சோறு போடுவேனு தாத்தா சொல்லிட்டாரு. அதனால் நம்பிட்டேன்'' என்பார். அந்த வகையில் செங்கோட்டையனின் இந்த அறிக்கையை சிலர் மீமாக்கி உள்ளனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications