நீங்க நடத்துற அரசியல் மட்டும் எங்களுக்கு புரியுதா? ஜெயக்குமாரை வாரும் நெட்டிசன்ஸ்

கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை என அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் வாங்கி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை என அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் வாங்கி வருகின்றனர்.

நடிகர் கமல் தான் ஒரு விதை என்று கூறியதை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை என கூறியுள்ளார்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சைனீஸ்லயே

கமல் புரியாத மொழியில் பேசுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
சைனீஸ்லயே பேசற அமைச்சருக்கு தமிழ் புரியாத மொழிதான்...என்கிறார் இந்த வலைஞர்

தூவிட்டு போகட்டும்

கவர்ச்சி காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது #ஸ்டாலின்
நான் பூ அல்ல விதை, விதைத்து பாருங்கள் முளைப்பேன் #கமல்
கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை #ஜெயக்குமார்
அந்த விதைய வெளிநாடு போறப்ப மோடி-கிட்ட கொடுங்க அவர் எங்கயாவது தூவிட்டு போகட்டும் #மக்கள்

ஐ வான்ட் மோர் எமோஷன்

கமலின் பயணத்தில் எழுச்சியில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
பூ - விதை - எழுச்சி ஐ வான்ட் மோர் எமோஷன்..

யாரும் வரக்கூடாது

கமல் ஒரு காகித பூ என்று ஸ்டாலின் சொன்னது சரியே - அமைச்சர் ஜெயக்குமார்
நம்ம ரெண்டு பேரும் அடிச்சிக்கிலாம் ஆனா இடையில்ல யாரும் வரக்கூடாது நல்ல டீல்
தல தளபதி நடிகர் சண்டையில கூட இது தான்

வலைபாய வாழ்த்துக்கள்

கமல் காகித பூ - ஸ்டாலின்
நான் மலரல்ல விதை - கமல்
கமல் மரபணு மாற்றப்பட்ட விதை -ஜெயக்குமார்
பதிலுக்கு பதில் நல்ல பதிவு வலைபாய வாழ்த்துக்கள்.!

அரசியல் செய்வோம்

பள்ளிக்கூடம் என்பது அரசியல் செய்யும் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
பள்ளிகூட மாணவர்களை வைத்து மட்டுமே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அரசியல் செய்வோம்

அரசியலே புரியாத புதிர்தான?

புரியாத மொழியில் கமல் பேசுகிறார்-அமைச்சர் ஜெயக்குமார்
# அரசியலே புரியாத புதிர் தான? நீங்க நடத்துற அரசியல் மட்டும் எங்களுக்கு புரியுதா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+