டாஸ்மாக் 2 கி.மீக்கு ஒன்னு, நீட் மையம் 2000 கி.மீக்கு அந்தப் பக்கம்! கொதிக்கும் நெட்டிசன்ஸ்!
தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் போதுமான அளவுக்கு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக எஞ்சிய மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில..
|
மோடி அரசின் வெற்றி
நீட் தேர்வு ரத்து செய்ய போராடிட்டு இருந்தோம் இப்ப தேர்வு மையம் தமிழ்நாட்டில்ல இல்லைனு போராடுறதே மோடி அரசின் வெற்றி
|
அதுதான் அரசியல்
அயோக்கிய அரசியல் எனப்படுவது யாதெனில்..
கடந்தாண்டு நீட் தேர்வு வேண்டாம் என்று போராடிய மக்களை..
அடுத்த ஆண்டே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று கெஞ்ச விட்டான் பாருங்க.. அதுதான் அரசியல்.
|
மாபெறும் வெற்றி
மத்திய அரசு வென்றுவிட்டது. கடந்த ஆண்டு நீட்க்கு எதிராக போராட்டம் நடைபெற்ற மாநிலத்தில், இந்த ஆண்டு நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு தொடர்பான கட்டணக் குரல்கள் மட்டுமே பதிவாகியள்ளது. இது மத்திய அரசின் மாபெரும் வெற்றியே.
|
கார்பரேட் அரசியல் யுக்தி
நீட்டை எதிர்த்த நம்மை, நீட் தேர்வு மையம் வேண்டி வழக்கு தொடர வைத்தது தான் கார்பரேட் அரசியல் யுக்தி.
|
போரா வைத்ததே..
அரசியல் என்பது யாதெனில், நீட் வேண்டாம் என போராடியவர்களை, இன்று நீட் தேர்வு மையம் தமிழகத்தில் வேண்டும் என போராட வைத்ததே..
|
வேண்டாம்னு போராடுனதான்
அப்பு... இப்ப நீட் தேர்வு மையம் தமிழ் நாட்ல இல்லயானு போராடுரவன்லாம் யார்னு நினைச்சிய...
போன வருசம்.. நீட் தேர்வு தமிழ் நாட்டுக்கு வேண்டாம்னு போராடுன பயலுகதான்...
|
என்ன கொடுமை சார்
டாஸ்மாக் கடை 2 கி.மீக்கு ஒன்னு இருக்கு, ஆனா நீட் தேர்வு மையம் மட்டும் 2000 கி.மீக்கு அந்தப்பக்கம் தான் இருக்காம்.. என்ன கொடுமை சார்..












Click it and Unblock the Notifications