ஆன்டி வைரஸ் போட்டா போதுமே அரசியலுக்கு வரணுமா தலைவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கொள்கையை பற்றி கேட்ட ஊடகங்களை கலாய்த்த ரஜினி

  சென்னை: நடிகர் ரஜினிக்காந்த் அரசியல் அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

  நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினி இன்று தனது அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.

  அரசியலுக்கு வருவது உறுதி என அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..

  கூத்தாடிக்கு கொண்டாட்டம்..

  அரசியலில் குதிப்பதாக ரஜினிகாந்த் அறிவிப்பு.. மாநிலம் முழுக்க ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
  // ஊரு ரெண்டு பட்டா.. கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாங்க.

  வசூல் வேட்டைதான்

  அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினிகாந்த்
  அப்ப இரண்டுபடம் நல்ல வசூல் வேட்டைதான்

  போட வேண்டியது தானே தலைவா!

  'ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும்!' - ரஜினிகாந்த் அதிரடி
  பேசாம ஒரு ஆன்டி வைரஸ் போட வேண்டியது தானே தலைவா !

  ரஜினிக்கு போட மாட்டங்களா..

  தமிழக மக்கள் இப்போ இருக்கிற நிலைமைக்கு ஜனகராஜுக்கே ஓட்டு போடுவாங்க.. ரஜினிக்கு ஓட்டு போட மாட்டங்களா..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth announced his political arrival today. Netizens sharing their views Rajinikanth politics on social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற