மக்களை மதிக்காத அதிமுகவுக்கு இனி அழிவுதான்.. எடப்பாடி பழனிச்சாமி அரசை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
ஒட்டுமொத்த மக்களின் மன ஓட்டம் சசிகலாவுக்கு எதிராக இருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் எதற்காகவோ சசிகலா பக்கம் சப்போர்ட் செய்துவிட்டனர் என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
சென்னை: சசிகலா குரூப்பை சேர்ந்த எடப்பாடி பவனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அதை பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மக்கள் காட்டமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஒட்டுமொத்த மக்களின் மன ஓட்டம் சசிகலாவுக்கு எதிராக இருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் எதற்காகவோ சசிகலா பக்கம் சப்போர்ட் செய்துவிட்டனர் என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
மக்களை மதிக்காத இந்த ஆட்சியாளர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும் என்ற கொதிப்பு சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறது. மக்களின் கொதிப்பான கருத்துக்களை இங்கு பாருங்கள்.
|
மனசாட்சிக்கு எதிரானது
"மக்கள் மனசாட்சிக்கு விரோதமா ஒரு விஷயம் நடந்துட்டு இருக்கு அதை தடுக்க முடியாம வேடிக்கை பாக்க வேண்டியதா ஆகிட்டுன்னு நினைக்கும்போது" என்று ஆதங்கம் வெளிப்படுத்துகிறது இந்த டிவிட்.
|
முதல்வன் வரவில்லையே
பன்னீர்செல்வத்திடம் எதிர்பார்த்தது, முதல்வன் திரைப்பட ஹீரோ அர்ஜுன் பாணியிலான எழுச்சியை என்றும், ஆனால் நடந்தது "வருங்கால ஜனாதிபதி வாழ்க" என கோஷமிடும் காட்சிதான் என்றும் கூறுகிறது இந்த டிவிட்.
|
கடைசி நாலு வருடம்
அத்தன பேருக்கும் அரசியல்ல கடைசி நாலு வருசம்.. வாழ்ந்துக்கங்க போங்க.. என்கிறது இந்த டிவிட். மக்கள் விருப்பத்திற்கு எதிராக சசிகலா பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் நின்றதால் இப்படி கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்கும்போது உஷார்
ஆக, மக்கள் விருப்பம் அல்ல! எம்.எல்.ஏக்களின் விருப்பமே ஜனநாயகத்தில் இறுதியானது. இனியேனும், உங்களை ஆளத் தகுதியுள்ளவர்களுக்கு வாக்களியுங்கள்.
|
தடுத்து நிறுத்துங்கப்பா
"தாலி கட்டுற நேரத்துல வந்து எவனாவது நிறுத்துங்கன்னு சொல்வானான்னு பாக்குற மனநிலை..." என்று பதவியேற்பு விழா நிறுத்தப்படாதா என்ற தனது ஆதங்கத்தை கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
ரிமோட் போச்சே
ரிமோட் நம்ம கைக்கு வந்திரும்ன்னு ஓபிஎஸ் இருந்தப்ப வேற ரிமோட் கொண்டாந்து சேனல மாத்துனா எப்படி இருக்குமோ அந்த மனநிலையில் தான் இருப்பார் ஓபிஎஸ்.
மக்கள் மேலயும் தப்பு
"5 ரூபாய் பிரியாணி சாப்பிட்டா காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும்... அது மாதிரி 500 ரூபாய் வாங்கி ஓட்டு போட்டா எடப்பாடி பழனிசாமி மாதிரி முதல்வர் வராம சிங்கப்பூரை உருவாக்கின லீ குவான் யூ மாதிரி தலைவரா நமக்கு முதல்வரா வருவாங்க... தப்பு அரசியல் வாதிக்கிட்ட இல்ல தேர்ந்தெடுக்கற மக்கள் கிட்ட தான்" என்கிறது இந்த பேஸ்புக் நிலைத்தகவல்.
அதிமுகவுக்கு அழிவு
#எல்லாம்_நன்மைக்கே.. Ops முதல்வராக தொடர்ந்திருந்தால் ஆதிமுகாவை கொஞ்சம் காபாற்றியிருக்கலாம்..ஆனா எடப்பாடி முதல்வரானதால் அதிமுக #இனி_மெல்ல_சாகும்.. என்கிறது இந்த பேஸ்புக் பதிவு.
-
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications