For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மி கொத்த சிற்பி எதற்கு? திரிபுரா முதல்வரை விளாசும் நெட்டிசன்ஸ்

அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போடலாம், மாடு மேய்க்கலாம் என்று பேசிய திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு!- வீடியோ

    சென்னை: அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போடலாம், மாடு மேய்க்கலாம் என்று பேசிய திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

    திரிபுரா முதல்வர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு பின்னால் அலைவதை விட பீடா கடை வைத்தும் மாடு மேய்த்தும் பிழைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தார்.

    அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

    அய்யா தர்ம பிரபு

    //அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் மாடு மேய்க்கலாம் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கருத்து தெரிவித்துள்ளார்.//
    அய்யா, தர்ம பிரபு, ‘நீங்க அதை முன்மாதிரியா செய்யாம, ஏன்யா அடிச்சி புடிச்சி முதல்வர் பதவிக்கு வந்தீங்க.

    அம்மி கொத்த சிற்பி எதற்கு

    படித்த இளைஞர்கள் அரசு வேலையைத்தேடி அலைவதை விட பான்கடை வைத்தோ, மாடு மேய்த்து பால் கறந்தோ சம்பாதிக்கலாம் - பிப்லாப் தேப், திரிபுரா முதல்வர்!
    அம்மி கொத்த சிற்பி எதற்கு?

    நீங்கள் முதல்வரானீர்?

    இளைஞர்கள் அரசு
    வேலைக்காக அரசியல்
    கட்சிகளின் பின்
    செல்வதற்கு பதிலாக
    பான் கடை வைத்தோ
    அல்லது மாடு வளர்த்து
    பால் கறந்தோ சம்பாதிக்கலாம்
    -திரிபுரா முதல்வர்
    பிப்லாப் தேப்
    #இதை சொல்லவாயா நீங்க முதல்வரானீங்க

    அதான் வித்தியாசம்

    மாணிக் சர்க்கார எத்தனை பேருக்குத் தெரியும் ? ஆனா, இப்ப திரிபுரா முதல்வர்னா இந்தியாவே சொல்லும் பிப்லாப் தேப்னு! அதான் வித்தியாசம்!

    English summary
    Netizens slams Tripura Chief minister Biplab Kumar deb. Biplab kumar deb said gradutes can run pan shop instead of run after govt jobs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X