For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்போதைக்கு எச். ராஜா டிரோல் ஓயாது போலயே!

பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எச். ராஜாவுக்கு நச் பதிலடி தந்த விஜய்!

    சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை நெட்டிசன்கள் விடாமல் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

    மெர்சல் விவகாரத்தில் வாய் திறந்தாலும் திறந்தார் எச் ராஜா, அன்று முதல் சமூக வலைதளங்களில் பெரும் கேலி பொருளாகிவிட்டார். நாள் தோறும் அவர் குறித்து ஏராளமான மீம்ஸ்கள் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்த வண்ணம் உள்ளன.

    அதற்கேற்றார்போல் எச் ராஜாவும் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கூறிவருகிறார். மெர்சல் படம், நெல்லை தீக்குளிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த அவரின் கருத்துக்களை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

    அவங்களுக்கு காய் நகர்த்துராரு

    எச் ராஜா என்னமோ காங்கிரஸ்காரர் மாதிரியே தெரியுராப்ல அவங்களுக்கு சாதகமாவே காய் நகர்த்துராரு.. என்கிறார் இந்த நெட்டிசன்

    ஷர்மாஜிக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே

    கிருத்துவர்களில் மட்டுமல்லாது இந்து,முஸ்லிம்களிலும் "ஜோசப்களை"உருவாக்கி மத ஒற்றுமைக்கு பாடுபடும் ஷர்மாஜிக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

    ட்ரெண்ட் பண்ணியே ஆகனும்

    பாஜகவில் இருப்பவர்கள் தீக்குளிக்க மாட்டார்கள் - எச் ராஜா

    நீங்க குளிங்க இல்ல குளிக்காம இருங்க, ஆனா GST பத்தி படம் வந்தா ட்ரெண்ட் பண்ணியே ஆகனும்.. என நக்கலடிக்கிறார் இந்த வலைஞர்

    ஆனா.. நன்றி மக்களுக்கு

    எச் ராஜா மொமென்ட் நவ்.. முக்கி முக்கி விளம்பரம் பண்ணுணது நானும் தமிழிசையும் ஆனா.. நன்றி மக்களுக்கு.. என எச் ராஜா கூறுவதாக கிண்டலடிக்கிறது இந்த மீம்

    நல்ல பேரா வைய்ங்க

    அத்வானிஜீக்கு ஒரு நல்ல பேரா வைய்ங்க !! என எச் ராஜாவை சீண்டுகிறார் இந்த நெட்டிசன்

    English summary
    Netizens still making fun of H Raja on the mersal issue. H Raja condemns Actor vijay for his mersal movie.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X