சிறுத்தை சிக்கிருச்சே.. மோடி பிரஸ் மீட்டை ஜாலியாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
Recommended Video
சென்னை: எந்த நேரத்தில் பிரதமர் மோடி பிரஸ்மீட் செய்தாரோ, இணையம் முழுக்க நேற்று முதல் இதே பேச்சுதான். 5 வருடங்களில் முதல் முறையாக பிரஸ் மீட் செய்த பிரதமர் ஏதேதோ சொல்வார் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்க, அவரோ எதுவும் பேசாமல் எழுந்து சென்ற அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை திருவாளர் பொதுஜனம்.
தங்கள் ஆதங்கத்தை #PressConference என்ற டேக் உருவாக்கி, டிவிட்டரில் கொட்டித் தீர்த்தனர் நெட்டிசன்கள். மேகம், ரேடார், டிஜிட்டல் கேமரா, இமெயில் என வரிசையாக நெட்டிசன்களின் ஹாட் கேக்காக மாறிவிட்ட மோடியின் நேற்றைய பிரஸ் மீட், அந்த கேக்கில் வைத்த செர்ரி பழம்போல முத்தாய்ப்பாய் அமைந்தது.
நெட்டிசன்கள் மோடியின் பிரஸ் மீட்டை பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ரவுண்டு போய் பார்க்கலாம், வாங்க:
|
உடல்மொழி வேறுபாடு
உண்மையான பேட்டியின்போதும், ஏற்கனவே தயாரித்து உருவாக்கப்பட்ட சிறப்பு பேட்டிகளின்போதும், மோடியின் உடல் மொழியில் ஏகப்பட்ட வித்தியாசம் இருப்பதை பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று, சொல்கிறார் இந்த நெட்டிசன்.
|
கிண்டலுக்கு பதில்
கர்மா விடாது என்பார்கள். 5 வருடங்கள் முன்பாக மன்மோகன்சிங்கை, மவுனமோகன் என கிண்டல் செய்த மோடி, இப்போது மவுனமாக இருக்கிறார் என்று கேலி செய்கிறார் இந்த நெட்டிசன்.
|
தோழியுடன் பேச்சு
தோழியிடம் நம்மை பேச விடாமல் லொட லொடவென கூட இருக்கும் நண்பனே பேசிக் கொண்டிருப்பதை போல, மோடியை பேசவிடாமல் அமித்ஷாவே முழுக்க முழுக்க பத்திரிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று கூறுகிறது இந்த ட்வீட்.
|
சிறுத்தை சிக்கிருச்சே
மன்கி பாத் போன்ற ரேடியோ உரையாடல் நிகழ்ச்சியில் சீறிய சிறுத்தை போல காட்சியளித்த மோடி, பிரஸ் மீட்டில், 2வது படத்தில் உள்ள சிறுத்தை போல சிக்கிக் கொண்டதாக கிண்டல் செய்கிறது இந்த மீம்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications