கோஹ்லி இந்தியன் டீம் எங்கன்னு கேட்டா என்ன ரோஹித் சொல்லுவீங்க.. பேட்டிங்கை கலாய்த்த நெட்டிசன்ஸ்
இந்தியா மற்றும் இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது.
தர்மசாலா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் மோசமாக ஆடி இருக்கிறது.
இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். டோணியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நிறைய டிவிட்களும், மீம்களும் போட்டு தெறிக்கவிட்டுக் கொண்டுள்ளனர்.
|
சாமி போச்சு
இந்த நிலையில் சாமி படத்தில் ஹீரோ விக்ரமுக்கு கல்யாணம் ஆகும் போது நடக்கும் பிரச்சனையை வைத்து இந்த மீம் செய்து இருக்கிறார்கள். அதில் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு இடையில் கல்யாணம் நடக்கும் போது இங்கு இந்திய அணி மோசமாக மாறிவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.
|
இலங்கை ஜெயிக்கும்
இந்த நிலையில் இலங்கை தான் இந்த போட்டியில் ஜெயிக்கும் என்று இவர் கூறியுள்ளார். இலங்கை வீரர் ரசல் அர்னால்ட் ஏற்கனவே இலங்கை அணி ஜெயிக்கும் என்று கூறியிருந்தார். தற்போது அவரின் கணிப்பு படியே நடந்து விட்டதாக இவர் கூறியுள்ளார்.
|
மறந்தே போயிட்டோம்
இந்திய பேட்டிங்கை இவர் கலாய்த்துள்ளார். அதில் ''கோஹ்லி செஞ்சுரி அடித்து பார்த்து உள்ளோம். மற்ற வீரர்கள் எப்படி விளையாடினார்கள் என்று பார்க்கவே இல்லை. இன்னைக்கு பார்த்துட்டோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
உதவி உதவி
இந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை பார்த்து இந்திய அணிக்கு உதவ ஆம்புலன்ஸ் எதுவும் வராதா என்று இவர் கேட்டு இருக்கிறார். ஆம்புலன்சிற்கு கால் செய்தால் கூட உதவி கிடைக்கவில்லை என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications