பாஜகவின் இன்றைய மூடுக்கு ஏத்த சீன் இது தான்... தெறிக்கும் டுவீட்கள்!
குஜராத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையேயான கடுமையான போட்டி இன்றைய தேர்தல் முடிவுகளை சுவாரஸ்யமாக்கியது. குஜராத் தேர்தல் முடிவுகளை வைத்து டுவிட்டரில் வலம் வரும் சில சுவாரஸ்யமான டுவீட்டுகள் இதோ.
சென்னை : குஜராத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையேயான கடுமையான போட்டி இன்றைய தேர்தல் முடிவுகளை சுவாரஸ்யமாக்கியது. குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது பாஜக தான் என்பது உறுதியானாலும், காங்கிரசின் வளர்ச்சி பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஜராத் தேர்தல் முடிவுகளை வைத்து டுவிட்டரில் வலம் வரும் சில சுவாரஸ்யமான டுவீட்டுகள் இதோ.
டிசம்பர் 18 குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் இன்றைய நாள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான அளவுகோலாக இருந்தது. முதன்முறையாக சோனியாகாந்தி இல்லாமல் தனித்து களமிறங்கி பிரச்சாரம் செய்து வந்தார் ராகுல்காந்தி. ராகுல்காந்தியின் பிரச்சாரமா அல்லது மக்களின் எதிர்ப்பலையா என்கிற குழப்பம் ஒருபுறமிருந்தாலும் பாஜகவின் வெற்றி என்பது போராட்ட களமாகவே அமைந்தது.
இன்றைய வாக்கு எண்ணிக்கையானது தொடக்கம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமால் முன்னிலை நிலவரத்திலேயே அனல் பறந்தது. ஒரு ரவுண்டில் காங்கிரஸ் முன்னிலை வகித்தால் அடுத்த ரவுண்டில் பாஜக முன்னிலை என்று முன்னிலை நிலவரம் சக்கரம் போல மேலும் கீழும் சுழன்று வந்தது. குஜராத் தேர்தலையொட்டி டுவிட்டர் பக்கத்திலும் ஏராளமான ட்ரால்கள் நிரம்பி வழிகின்றன. அவற்றில் சில:
|
பாஜகவிற்கு ஏற்ற சீன்
முன்னிலை நிலவரம் மாறி மாறி வருவதால் தொடக்கத்தில் அழுது கொண்டிருந்த பாஜக பின்னர் வேதாளம் அஜித் போல 11 மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி மூடுக்கு மாறியது. அஜித்தின் தெறிக்கவிடலாமா சீனை வைத்து பாஜகவின் இன்றைய காலை முதல் தற்போது வரையிலான நிலவரத்தை போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பாஜக வெற்றிக்கான காரணங்கள்?
குஜராத்தின் வெற்றிக்காக பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கான வெற்றி. அவுரங்கசிப்பிற்கு நன்றி கூறியது, பாகிஸ்தான் தூண்டுவதாக கண்ணீர்விட்டது, கடல் விமானத்தில் பறந்தது, மணிசங்கர் ஐயரின் விமர்சனம் இவற்றிற்கு கிடைத்த வெற்றி தான் பாஜகவின் வெற்றி.
|
பத்மாவதி ரிலீஸ் எப்போது?
ஒரு வழியா குஜராத் தேர்தல் முடிவு தெரிஞ்சிடுச்சு இப்போவாவது பத்மாவதி படம் ரிலீஸ் தேதியை சொல்லுங்க என்று டுவீட்டியுள்ளார் இவர். பத்மாவதி படத்தில் ராஜ்புத்திர அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன, இதன் பின்னணியில் தேர்தல் யுக்தி இருப்பதாக அப்போதே குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போது இந்த டுவீட்டை வெளியிட்டுள்ளார் இவர்.
|
குஜராத் வெற்றியை இப்படி கணிக்கலாம்
பாஜக குஜராத்தில் வெற்றி பெற 150 இடங்களை இலக்கு நிர்ணயிச்சது, அருண்ஜேட்லி 150 பொருட்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி போட்டாரு ரெண்டையும் கூட்டி கழிச்சு பாருங்க பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் 108 என்பது அதிலேயே தெளிவா தெரியும்.
|
மங்கிப் போன ஆம் ஆத்மி கட்சி
குஜராத்தில் 2015ல் கால் எடுத்து வைத்த ஆம்ஆத்மி கட்சி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் செல்வாக்கு மறைந்து தற்போது இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது. இதனை குறிப்பிடும் விதமாக இந்த நெட்டிசன் ஒரு ட்ராலே போட்டுள்ளார்.
|
தப்பிச்சது டெபாசிட் எப்படி தெரியுமா?
குஜராத்தில் போட்டியிட்ட 11 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது. எனினும் 171 இடங்களில் டெபாசிட் பணம் தப்பிச்சிடுச்சு எப்படி தெரியுமா அங்கயெல்லாம் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை என்று நக்கலாக டுவீட்டியுள்ளார் இவர்.












Click it and Unblock the Notifications