ஆன்மிக அரசியல்களே கடைசி வரைக்கும் உப்புமா தானா?... பறக்கும் நோ கிடா விருந்து கமென்ட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பீட்டாவின் எதிர்ப்பு எதிரொலியாக மதுரை அழகர் கோவில் திருவிழாவில் கிடா விருந்து கிடையாது என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து டுவிட்டரில் வலம் வரும் சுடான கமென்ட்ஸ்களின் தொகுப்பு.

மதுரையில் வருகிற ஜனவரி 7ம் தேதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் சார்பில் அழகர் கோவிலில் கிடா விருந்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரஜினியின் அரசியல் வருகையையொட்டி இந்த கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவிலில் கிடா வெட்டுவது சட்டப்படி குற்றம் என்று பீட்டா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதியது. இதனையடுத்து உடனடியாக கிடா விருந்து கிடையாது என்று மதுரை மாவட்ட ரசிகர்கள் அறிவித்துள்ளனர். பீட்டா கடிதம் மற்றும் ரஜினி ரசிகர்களின் பதில்கள் குறித்து டவிட்டரில் பலர் உடனுக்குடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தலை சுத்திருச்சு

அழகர் கோவிலில் கிடா விருந்து கூடாது என்று பீட்டா கூறி இருக்கிறது. இதை கேட்டு ரஜினியின் வசனத்தையே பதிலாக போட்டுள்ளார் இந்த நெட்டிசன் #ஒருநிமிஷம் தலைசுத்திருச்சு என்று பதில் போட்டுள்ளார் இவர்.

ஆடு எப்போ சேர்ந்துச்சு

கிடா விருந்து நடத்துவது சட்டப்படி குற்றம் என ரஜினிக்கு பீட்டா நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து மதுரையில் கிடா விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இந்த நெட்டிசன் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். ஆடு எப்போ பாதுகாக்கப்பட்ட விலங்குகள் லிஸ்ட்ல சேர்ந்துச்சு?

கடைசி வரைக்கும் உப்புமாவா?

அழகர் கோயிலில் கிடா வெட்டி விருந்து வைப்பதை தடுக்க வேண்டும் என ரஜினிக்கு பீட்டா கடிதம் எழுதியுள்ளது. ஆன்மீக அரசியல்களே.. அப்ப கடேசி வரைக்கும் உங்களுக்கு வெறும் உப்புமா தானா?.. என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

விருந்துல கெடாவே நான்தான்

அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துகள் ஆனால் கிடா விருந்து கூடாது என ரஜினிக்கு பீட்டா அறிவுரை கூறியுள்ளது. ஹ்ம்ம் ....இன்னைக்கு விருந்துல கெடாவே நான்தான் என்று ரஜினியின் மைண்ட் வாய்ஸ் சொல்வது போல பதில் டுவீட்டியுள்ளார் இவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens trolling Rajinikanth fans goat killing festival cancelled due to Peta opposing to it. Here are some interesting comments collections of it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற