பாஜவுக்கு சேராத கூட்டம்... தானா சேர்ந்த ஜல்லிக்கட்டு கூட்டத்தில் சீன் போட்ட தமிழிசை!
சிவகங்கை: பாஜகவிற்கு தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடாத நிலையில் சிராவயலில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக சேர்ந்த கூட்டத்தின் முன்பு தமிழிசை சவுந்தரராஜன் கையசைத்து போஸ் கொடுக்கும் காட்சியை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. மெரினா போராட்டத்தின் பயணாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி எந்த தடையும் இன்றி நடந்தேறியது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜனவரி 14 முதல் 16 வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று கண்டு மகிழ்ந்துள்ளார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தனது ஆதரவாளர்களுடன் தமிழிசை செல்லும் புகைப்படங்கள் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழிசை
சிராவயல் ஜல்லிக்கட்டுக்காக கூடிய பெருங்கூட்டம் என்று தமிழிசை தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்காக கூடிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் தமிழிசை கையசைத்து அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது போன்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்களை பார்த்து உற்சாகம்
தமிழிசையின் இந்த புகைப்படத்திற்கு பலரும் கேலி செய்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாஜக நடத்தும் கூட்டங்களுக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டம் இல்லாத நிலையில் தானாக சேர்ந்த கூட்டத்தின் முன் கையசைத்து தனது ஆசையை தீர்த்துக் கொள்கிறார் தமிழிசை என்று பலரும் கிண்டல் செய்கின்றனர்.
|
கூட்டம் சேரமாட்டேங்குதே
என்ன செய்ரது இப்படி தானா சேருர கூட்டத்தில் போய் நம்மளா நின்னாதான். நாம கூட்ற கூட்டத்துக்குதான் ஒரு பய வரமாட்றான்களே என்று டுவீட்டியுள்ளார் இவர்.
|
ஜல்லிக்கட்டுக்காக கூடின கூட்டம்
தமிழிசை கூட்டத்தை பார்த்து கையசைக்கும் புகைப்படத்திற்குத் தான் பலரும் எதிர் கருத்துகளை போட்டுள்ளனர். இந்த வலைபதிவர் பதிவிட்டுள்ள கருத்தில் அக்கா இந்த கூட்டம் உங்கள பார்க்க வல்ல ஜல்லிக்கட்டு பார்க்க வந்த கூட்டம் என்று கூறியுள்ளார்.
|
வாலன்டியரா போய் கைகாட்டும் மொமண்ட்
தமிழகத்தில் பாஜகவிற்கு செல்வாக்கே இல்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இவர் ஒரு பதிவை போட்டுள்ளார். நமக்கு கூட்டம் சேர போறதில்லை பேசாம நாமலே வாலியன்றியா போயி உட்காந்துட்டா மொமண்ட் என்று கேலி செய்துள்ளார் இவர்.
-
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
பக்ரீத் விடுமுறையை குறைத்த பாஜக.. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி உத்தரவு -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
"அதிமுகவும் திமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவியதா?" மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை பதிலடி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications