ஐபிஎல் ஏலம் 2021... பெட்ரோல் டீசலை போல விலையேறும் மெக்ஸ்வெல்.... இணையத்தில் வைரலாகும் மீமீஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 14ஆம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து வரும் நிலையில், பல வீரர்கள் எதிர்பாராத வகையில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனதைக் கலாய்த்து நெட்டிசன்கள் இணையத்தில் மீமீஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் மாதம் 2021 ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த முறை ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடந்த நிலையில், இந்த முறை இந்தியாவிலேயே முழு ஐபிஎல் தொடரும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போனதைக் கலாய்த்து நெட்டிசன்கள் மீமீஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல், மேக்ஸ்வெல்

பெட்ரோல், டீசல், மேக்ஸ்வெல்

இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கிளேன் மேக்ஸ்வெலை 14.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை, பஞ்சாப் அணி மெக்ஸ்வெல்லை 10.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆனால், ஒரு சிக்ஸ்சர்கூட அடிக்காமல் மிகவும் மோசமாகவே அவர் விளையானார். இந்நிலையில் அவரை ரூ. 14.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பெட்ரோல், டீசலுக்கு அடுத்து மெக்ஸ்வெலின் விலைதான் தொடர்ந்து ஏறி வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

புலம்பும் 90's கிட்ஸ்

புலம்பும் 90's கிட்ஸ்

அதேபோல, மண்டையை பிளக்கும் அசராமல் கிரிக்கெட் விளையாடிய 90'ஸ் கிட்ஸ்களும் மீமீஸ்களின் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெறும் தண்ணீரை ம்டடும் குடிச்சுட்டு நாள் பூர விளையாடும் தங்களையும் யாராவதும் வாங்க வேண்டும் என்று கோரிக்கை மனு எழுதாத குறையாக ட்விட்டரில் மீமீஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

பூஜாரா

பூஜாரா

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் தற்போதைய பெருஞ்சுவராக இருப்பவர் பூஜாரா. இவரை சிஎஸ்கே 50 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஹேஸில்வுட் உள்ளிட்ட பல வேகப்பந்து வீச்சாளர்களை செமயாக வெறுப்பு ஏற்றியவர் பூஜரா. வரும் ஐபிஎல் தொடரில் அதேபோல இல்லாமல் சிக்ஸர்களை அடித்து, பவுலர்களை வெறுப்பு ஏற்ற வேண்டும் என்ற ரீதியிலும் மீமீஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

சாம் பில்லிங்ஸ்

சாம் பில்லிங்ஸ்

இந்த மினி ஐபிஎல் ஏலத்தில் பெரும்பாலான அணிகளின் ஆர்வம் வேகப்பந்து வீச்சாளர்களிடமே இருந்தது. அவர்களே பல கோடிக்கு ஏலம் போகியுள்ளனர். இந்த கிண்டல் செய்யும் விதமாக வீரர்கள் பலரும் ட்வீட் செய்துள்ளனர். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சாம் பில்லிங்ஸ் உள்ளார். இன்று நடைபெற்ற ஏலத்தில் இவரை டெல்லி அணி அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. இதனால் ஏன் நீ பவுலராக இல்லை என்று தனது காதலி தன்னிடம் செல்லமாகச் சண்டை போடுவதாக அவரது ட்வீட்டும் தற்போது வைரலாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+