2022.. இந்தப் படம் என்ன சொல்ல வருதுனே புரியல.. உனக்கெல்லாம் எப்டி லவ் செட்டாகும்?
புத்தாண்டு பிறந்தது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: புத்தாண்டு பிறந்து விட்டது, இந்த வருடமாவது நமக்கு திருமணம் ஆகி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பேச்சிலர்களைக் கலாய்த்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கூகுள் டூடுள் போடுவது மாதிரி, ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் எண்ணை வைத்து, தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டி விதவிதமான படங்களை வரைந்து வருகின்றனர் சிலர். யார் வரைந்தது என்று தெரியாவிட்டாலும், சில படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பகிரப்படுவதுண்டு.

அந்தவகையில் கடந்த 2020ம் ஆண்டு, கடைசியில் உள்ள பூஜ்யத்தை மாஸ்க்காக வரைந்து கொரோனா பிரச்சினையை குறிப்பிட்டனர். அதற்கு அடுத்து வந்த 2021ம் ஆண்டை கடைசி ஒன்றை தடுப்பூசியாக வரைந்து தடுப்பூசி நம்பிக்கை தந்தனர். இந்தாண்டு இன்னமும் கொரோனா பிரச்சினை ஓயாத நிலையில், 2022ஐ கடைசியில் இரண்டு தடுப்பூசி போட்டு, பூஸ்டர் டோஸ் குறித்து விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, இன்னமும் திருமணமாகால் இருக்கும் பேச்சிலர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக, 2021ம் ஆண்டு ஒற்றை ஆளாக இருந்தவர்களுக்கு 2022ம் ஆண்டு ஜோடி கிடைக்கும் வாய்ப்பு அமோகமாக இருப்பதாகக் கூறி ஒரு படத்தை பகிர்ந்து வருகின்றனர். வழக்கம் போலவே இந்தப் படத்தையும் வைத்து மீம்ஸ் மழை பொழியத் தொடங்கி விட்டனர் மீமர்கள்.


இதோ அவற்றில் சுவாரஸ்யமான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications