அடேங்கப்பா.. பெரிய பணக்கார வீட்டு பொண்ணா இருக்கும் போலயே.. அட வெங்காயம்!
வெங்காய விலை குறித்து மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன
Recommended Video
சென்னை: "வெங்காயம்".. பெரியார் சொன்ன வெங்காயத்தை விட இன்று மார்க்கெட்டில் விற்கும் வெங்காயம் படு காஸ்ட்லியாக மாறி விட்டது. அதை வைத்துத்தான் எத்தனை எத்தனை மீம்ஸ்!?
எங்கு பார்த்தாலும் வெங்காய புராணம்தான். வெங்காயத்தின் விலையை கேட்டு உரிக்காமலேயே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது ஊரு ஜனம்... அப்படி ஒரு விலை உயர்வு.
வெங்காய விலை உயர்வு என்பது அவ்வப்போது வருவதுதான். கடந்த ஆட்சியிலும் வந்தது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் வந்தது. இப்போதும் வந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ சாட்சாத் மக்கள்தானே. இந்த வெங்காய விலை உயர்வை வைத்து வலம் வரும் மீம்ஸ்களை ஒரு ரவுண்டு பார்ப்போம்.
|
ரொம்ப கஷ்டம்
"டெல்லியில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் 120க்கு வாங்கினேன். 3 பேர் கொண்ட எங்கள் வீட்டிற்கு ஒரு கிலோ தான். 2 பேர் சம்பாதிக்கிறோம். ஆனாலும் இந்த விலை கடினமாக தான் இருக்கிறது. ஒருவர் சம்பாதித்து 5 பேருக்கு மேல் இருக்க கூடிய குடும்பங்களை நிலைமை! அரசுகளே எதையாவது செய்யுங்கள்" என்று கோரியுள்ளார் இவர்.
|
பணக்கார குடும்பம்
"பரவாயில்லை ப்ரோ வெங்காயம் வாங்கிற அளவிற்கு உங்க குடும்பம் பணக்கார குழுமத்தில் இணைந்து விட்டது. வாழ்த்துக்கள்" என்று இவர் கிண்டலடித்துள்ளார்.
|
இது மேடவாக்கம் வெங்காயம்
"மேடவாக்கத்தில் இன்று காலை கிலோ வெங்காயம் ரூ. 127" என்று இவர் பதிவிட்டுள்ளார்.
|
திருடர்களிடமிருந்து காக்க
கர்நாடக மாநிலம் காடக் மாவட்டத்தில் வெங்காயத்தை திருடர்கள் திருடி விடாமல் தடுக்க இரவுக் காவல் புரிந்து வருகின்றனராம்.
|
காசுக்கு பதில் வெங்காயம்
கரன்சிக்கு பதில் வெங்காயத்தையே பணமாக மாற்றி விட்டது இந்த விலை நிலவரம்.

பணக்காரர் போல
இதுதான் அல்ட்டிமேட்... இந்த பெண்ணின் காதை பாருங்க. தொங்கட்டானுக்கு பதில் வெங்காயத்தையே தொங்க விட்டுள்ளார். சொல்ல முடியாது.. நடந்தாலும் நடக்கும். யார் கண்டா!
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications