பாகுபலி, கபாலி ரேஞ்சுக்கு ஹீரோவான ஓபிஎஸ்... #opannerselvam

அரை மணிநேர தியானத்திற்குப் பிறகு மவுனம் கலைந்து ஓ.பன்னீர் செல்வம் பேசியது அவரது மதிப்பை இளைஞர்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது. மிக்சர் பன்னீர் செல்வம் என்று பதிவிட்டதற்கு வலைஞர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர

Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வலைத்தளங்களில் மிக்சர் பன்னீர் செல்வம் என்று பதிவித்தனர். நேற்று மெரீனாவில் பேசிய போது தனக்கு நேர்ந்த அவமானங்களை கொட்டி தீர்த்தார். தனிப்பட்ட அவமானங்களை தாங்கிக் கொள்வேன் என்றும் ஆட்சிக்கும், மக்களுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்றும் கூறினார்.

இதையடுத்து, பன்னீர் செல்வத்தை மிக்சர் பன்னீர் செல்வம் என்று கூறியதற்கு, மன்னிப்பு கோரி சமூக வலைதளங்களில் வலைஞர்கள் தங்களது பதிவுகளை இட்டு வருகின்றனர். அவருக்கு ஆதரவாக பல மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. பாகுபலி, கபாலி ரேஞ்சுக்கு கெத்து காட்டுகின்றனர் வலைத்தளவாசிகள்.

பாகுபலி

ஓ.பன்னீர் செல்வம் பாகுபலி ரேஞ்சுக்கு உயர்ந்து நிற்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறார் இந்த வலைஞர்.

சாது மிரண்டால்

சாது மிரண்டால்

வேதாளம் படத்தில் வில்லன்களிடம் அஜீத் காட்டும் ரியாக்சன்தான் ஓபிஎஸ் பேட்டிக்கு முன் பேட்டிக்கு பின் என்று மீம்ஸ் போட்டுள்ளனர் வலைத்தளவாசிகள்.

பேசும் சக்தி கொடுத்தோம்

பேசும் சக்தி கொடுத்தோம்

மிக்சர் சாப்பிடும் ஓபிஎஸ் என்று வலைத்தளவாசிகள் கிண்டல் செய்தனர். இப்போது சரஸ்வதி தேவியே ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேசும் சக்தி கொடுத்ததாக கூறியுள்ளார்.

டைம் இல்லம்மா

டைம் இல்லம்மா

சசிகலா முதல்வராக பதவியேற்க ஆளுநர் தடையாக இருக்கிறார் என்பதை கூறவே இந்த மீம்ஸ் என்கின்றார் இந்த வலைஞர்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு

2 நாளைக்கு முன்னாடி சிஎம் போஸ்ட் ரிசைன் பண்ணிட்டு எப்படி போனேனே அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று கபாலி ரேஞ்சுக்கு ஓபிஎஸ்க்கு கெத்து காட்டுகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நீடிக்க ஆதரவு தெரிவித்து ஐ சப்போர்ட் ஓபிஎஸ் என்று ஹேஸ்டேக் பதிவிட்டும் ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+