ட்ராப்டர்லாம் வச்சி கோலம் போட்டுருக்கிறதை பார்த்தா.. சிவில் இன்ஜினியரிங் படிக்கிற பொண்ணா இருக்குமோ?
மாட்டுப் பொங்கல் கோலங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மாட்டுப் பொங்கலுக்கு ஸ்கேல் எல்லாம் வைத்து மாடுகளை கோலங்களாக வரைந்து அதகளப் படுத்தியுள்ளனர் மக்கள். அவற்றைப் பற்றி ஜாலியாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கல் என்றாலே கரும்பு, சர்க்கரைப் பொங்கலுக்கு இணையாக கோலங்களுக்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வண்ண வண்ணப் பொடிகளை வைத்து தைத்திருநாள் அன்று எல்லா வீடுகளிலும் பொங்கல் பானையும், கரும்பும் வரைந்திருப்பார்கள். பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் அன்று, பொங்கல் பானைகளோடு மறக்காமல் மாடுகளையும் வரைந்திருப்பார்கள்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அளவு மாடுகளை வாசலில் கோலங்களாக கொண்டு வந்திருப்பார்கள். ஒரு சிலர் கச்சிதமாக வரைகிறேன் என்ற பெயரில் ஸ்கேல் வைத்தெல்லாம், மாட்டை வரைந்துள்ளனர். வழக்கம் போலவே கரும்பைக் கடித்துக் கொண்டே, இந்தக் கோலங்களைக் கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...

















Click it and Unblock the Notifications