மோசமான போட்டியாளர் ஜூலி... கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி மோசமான போட்டியாளர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி மோசமான போட்டியாளர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி புகழ்பெற்றவர் ஜூலி. இதன் அடிப்படையிலேயே விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் கதறினார் ஜூலி. அதிலிருந்தே அவரை வெறுக்க தொடங்கினர் ரசிகர்கள்.

இதைத்தொடர்ந்து சக போட்டியாளர்கள் குறித்து பின்னால் சென்று பேசுவது, அழுதே காரியத்தை சாதிப்பது என அனைத்து விஷயங்களிலும் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் ஜூலி.

போதா குறைக்கு சக ஆண் போட்டியாளர்களை காரணமே இல்லாமல் கட்டிப்பிடித்து வருகிறார். இது ஜூலி மீதான மேலும் அதிகரித்துள்ளது. ஜூலியின் இந்த பிஹேவியரால் கடுப்பில் உள்ள மக்கள் அவரை மோசமான போட்டியாளர் என சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜூலி ரொம்ப நடிக்காத..

ஜூலி ரொம்ப நடிக்காத.. நீ ஓவியாவுக்கு பின்னாடி நிறைய பேசுகிறாய். ஓவியா உண்மையாக இருக்கிறார். இன்று நீ காயப்படும் போது ஓவியாதான் உனக்கு ஆறுதல் கூறுகிறார்.. என்கிறது இந்த டிவீட்

கட்டிப்பிடிப்பதற்காகவே..

உணர்ச்சிவசப்பட்டுக் கட்டிப்பிடிப்பவள் தோழி... கட்டிப்பிடிப்பதற்காகவே உணர்ச்சிவசப்படுறவ ஜூலி... என்கிறது இந்த டிவீட்

கட்டிபிடிக்கவே விரும்புகிறார்..

அய்யோ இந்த ஜூலி எல்லோரையும் கட்டிபிடிக்கவே விரும்புகிறார்.. என்ன பிரச்சனை அவருக்கு என்கிறது இந்த டிவிட்

ஜூலி ஒரு விஷம்

எல்லோரின் சுயரூபமும் தெரிகிறது.. ஓவியாதான் க்யூட் அன்ட் லவ்வப்ல்.. ஜூலி ஒரு விஷம் என்கிறது இந்த டிவீட்

ஏன் கட்டிப்பிடிக்கிறார்?

ஜூலியின் நடத்தை எரிச்சலை ஏற்படுத்துகிறது..நடிகைகள் கூட இதுவரை யாருக்கும் முத்தம் கொடுத்ததில்லை.. ஆனால் ஜூலி மட்டும் ஏன் எல்லோரையும் கட்டிப்பிடிக்கிறார்? என கேட்கிறது இந்த டிவீட்

மோசமான போட்டியாளர் ஜூலிதான்..

பிக்பாஸில் மோசமான போட்டியாளர் ஜூலிதான்.. அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்கிறது இந்த டிவீட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+