கிணத்தைக் காணோம், சம்பளத்தைக் காணோம்னு சொன்ன சரி... இப்போ சன்டேவும் காணோம்னு வந்து புகார் பண்றியே!
சென்னை: புரட்டாசி மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், இன்றே வயிறு நிறைய அசைவ உணவுகளை ஆசை தீரச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என மீம்ஸ் போட்டு அசைவப் பிரியர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழையும், வெயிலும், காற்றும் என எல்லாம் கலந்து கட்டி அடிக்கும் மாதம் என்பதால், மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வாரத்தில் ஞாயிறு மட்டுமே வயிறாற அசைவம் சாப்பிடும் நம் மக்கள், இன்னும் ஒரு மாதத்திற்கு நம் வாயைக் கட்டியாக வேண்டுமே என புரட்டாசி மாதம் நாளை பிறப்பதை நினைத்து கவலைப்பட்டு வருகின்றனர்.
இன்று பல வீடுகளில் புரட்டாசியில் அசைவம் தவிர்ப்பதில்லை. 'உங்களுக்கு வேணும்னா இது புரட்டாசி, ஆனா எங்களுக்கு இது செப்டம்பர், அக்டோபர்' என சாக்குபோக்கு சொல்லி விடுகின்றனர். ஆனால், வீட்டின் கட்டுப்பாட்டை மீற முடியாமல், வெளியில் சாப்பிடவும் மனது வராமல் கட்டுப்பாட்டுடன் உள்ள அசைவப் பிரியர்களுக்கு இன்று விட்டால், இன்னும் ஒரு மாதம் வெறும் சைவச் சாப்பாடுதான்.
அதனால்தான், அவர்களின் நாக்கைக் கருத்தில், 'நாளை புரட்டாசி மாதம் பிறந்து விடும் என்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு தேவையான அளவு இன்றே திகட்ட திகட்ட அசைவம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்' என மீம்ஸ் போட்டு அறிவுறுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். எனவே, இந்த வாரம் ஞாயிறு ஸ்பெஷலாக அசைவ உணவு மீம்ஸ்களோடு, இந்த புரட்டாசி மீம்ஸும் கை கோர்த்துக் கொண்டுள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications