ஒரு கிலோ ஸ்வீட் கொடுத்து 40 எம்பியை தூக்கி சென்ற ராகுல் காந்தி.. அதேபோல் விஜய்.. திமுகவினர் மீம்ஸ்
சென்னை: வீட்டுக்கே வந்து தலைவரை (ஸ்டாலினை) மீட் பண்ணதும், மனசு உருகிருக்குமே.. ~ ஆமா.. பிச்சுருவேன்.. இப்டிதான் 2 வருஷம் முன்ன ஒருத்தன் 1 கிலோ ஸ்வீட் வாங்கி குடுத்துட்டு 40 MP யை அள்ளிட்டு போனான். இப்போ முத ஆளா ஓடிட்டான். ஞாபகம் வைச்சுக்கோ என்று ராகுல் காந்தியை கிண்டல் செய்தும், விஜய்யை விமர்சித்தும் திமுகவினர் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். அது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு மாற்றங்கள் அடுத்தடுத்து ஒரே நாளில் நடந்து வருகிறது. நேற்று முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே போய் சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார். அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு சென்று வாழ்த்த பெற்றார். அடுத்ததாக மதிமுக தலைவர் வைகோவை நேரில் சென்று விஜய் பார்த்து வாழ்த்து பெற்றார்.

மேலும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விஜய் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது புதியதாக பார்க்கப்பட்டது. அண்ணாவிற்கு பிறகு விஜய் தான் இப்படி எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக தகவல்கள் பரவி வருகிறது.
இது ஒருபுறம் எனில்,தவெக கூட்டணியில் கூட்டணி பேச்சுகள் மற்றும் புதிய கட்சிகளின் வரவு சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு மீம் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திமுக ஆதரவாளர் வெளியிட்ட ஒரு மீம்ஸ் பதிவில் "வீட்டுக்கே வந்து தலைவரை (ஸ்டாலினை) மீட் பண்ணதும், மனசு உருகிருக்குமே.. ~ ஆமா.. பிச்சுருவேன்.. இப்டிதான் 2 வருஷம் முன்ன ஒருத்தன் 1 கிலோ ஸ்வீட் வாங்கி குடுத்துட்டு 40 MP யை அள்ளிட்டு போனான். இப்போ முத ஆளா ஓடிட்டான். ஞாபகம் வைச்சுக்கோ" என்று கூறியுள்ளார். இது காங்கிரஸ் - திமுக கூட்டணியின் கடந்தகால தொகுதிப் பங்கீட்டைச் சுட்டிக்காட்டி நையாண்டி செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

வைரலாகி வரும் அந்தப் பதிவில், ஸ்டாலினுக்காக 2024ம் ஆண்டு ராகுல் காந்தி, கோவையில் உள்ள ஒரு சாலையில் டிவைடரை தாண்டி சென்று இனிப்பு வாங்கி சென்று சந்தித்தார். அப்போது என் அண்ணணுக்காக ஸ்வீட் வாங்கினேன் என்று கூறினார். விஜயகாந்த் படத்தில் வரும் சீனையே ஓவர்டேக் செய்யும் வகையில் அது இருந்தது. இந்த நிலையில் தான் முதல்வர் விஜய், ஜெயித்த கையோடு, திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று சந்தித்ததை தொடர்பு படுத்தி மீம்ஸ் வெளியிடப்படடிருந்தது.
கடந்த தேர்தலில் 'ஸ்வீட்' கொடுத்து ஸ்டாலினைச் சரிக்கட்டி, அதிக இடங்களைப் பெற்றுக்கொண்ட ராகுல் காந்தியை "சாமர்த்தியமானவர்" என்றும், ஸ்டாலினை "ஏமாற்றியவர்" என்றும் மீம்ஸ் இருக்கிறது. அதேபோல், இப்போது அரசியலுக்கு வந்துள்ள விஜய், இதுபோன்ற "ஸ்வீட்" பேச்சுகளில் மயங்காமல் உஷாராக இருக்க வேண்டும் என்பது போலவும், அல்லது விஜய்யின் வருகையால் திமுகவின் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்பதை உணர்த்தும் விதமாகவும் இந்த மீம் பகிரப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications