ஒரு காலத்துல இவரக் கண்டாலே அலறுவாங்க..ஆனா இப்போ ரெண்டு வருசமா இவரு வர்றதும் தெரியல.. போறதும் தெரியல!
சென்னை : அக்னி நட்சத்திரம் முடிந்து விட்ட போதும், இன்னமும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் வெயில் தன் வேலையைக் காட்டும், கோடை விடுமுறையை நீட்டித்து தங்களுக்கு கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கும் என மாணவர்கள் ஆசையாய் காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பில் கோடை மழை தண்ணீரை ஊற்றி விட்டது. சரி, இப்படியே குளுகுளுவென இருந்தால், பள்ளிக்கு ஜாலியாக போய் வரலாம் என அவர்கள் நினைத்திருக்கையில், சூரியன் மீண்டும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது.
சில மாவட்டங்களில் மாலையில் மழை கொஞ்சம் குளிர்வித்தாலும், பகலில் வெயில் பட்டையைக் கிளப்பி விடுகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திரக் காலத்தை நினைத்துத்தான் மக்கள் பயந்து வந்தார்கள். ஆனால் இந்தாண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை.
பிறகென்ன, "ஒரு காலத்துல இவரக் கண்டாலே அலறுவாங்க.. ஆனா இப்போ ரெண்டு வருசமா இவரு வர்றதும் தெரியல.. போறதும் தெரியல!" என அக்னி நட்சத்திரத்தை வைத்தும், மே மாதம் முடிந்தும், வெயில் இன்னமும் ஓவர் டைம்மில் வேலை பார்ப்பதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications