இப்படி நடந்தால்.. சிஎஸ்கே ரசிகர்கள் நிச்சயம் தாங்க மாட்டாங்க.. தோனி, கோலி மீம்ஸ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று மாலை மோத உள்ள போட்டி, இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் அந்த பக்கம் வீராட் கோலி, இந்த பக்கம் தோனி நேருக்கு நேர் மோதும் போட்டியாகும். இருவரையும் வைத்து மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஐபிஎல் போட்டியே பார்க்காதவர்கள் கூட, ஏன் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட இன்று நடக்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையிலான ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள். பொதுவாகவே சிஎஸ்கே எந்த அணியுடன் மோதினாலும் அந்த ஆட்டத்தை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை, மற்ற அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிகளை காண்போரைவிட அதிகமாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி மட்டுமே..

RCB vs CSk memes A Memes video created by CSK fans about Mahendra Singh Dhoni and Virat Kohli

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி தொடராக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. சச்சினை விடவும் புகழ் பெற்ற ஒரு கிரிக்கெட் வீரர் இந்தியாவில் உள்ளார் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். இந்தியாவிற்கே டி20, 50 ஓவர் உலக கோப்பையை பெற்று தந்தவர். ஒட்டுமொத்த இந்திய மக்களால் கொண்டாடப்பட்ட தோனி சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட போது, சென்னை ரசிகர்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. தல என்று அவரை அடையாளமிட்டே அழைத்தார்கள். தல தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். பல முறை கோப்பையை வென்று கொடுத்தார். தோனியை பார்க்க வேண்டும் என்பதற்காக இன்று வரை சிஎஸ்கே போட்டியை பார்ப்பவர்களே அதிகம்.

RCB vs CSk memes A Memes video created by CSK fans about Mahendra Singh Dhoni and Virat Kohli

இது ஒருபுறம் எனில், தோனிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகப்படியான ரசிகர்களால் இன்றும் நேசிக்கப்படும் வீரர் என்றால் அது வீராட் கோலி தான். இந்திய கிரிக்கெட் அணியின் தளபதியாக இருக்கிறார். இவர் பல ஆண்டுகளாக விளையாடி வரும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.இதை சுட்டிக்காட்டி மீம்ஸ் எல்லாம் போட்டு கிண்டலடித்தனர்.

RCB vs CSk memes A Memes video created by CSK fans about Mahendra Singh Dhoni and Virat Kohli

பெங்களூர் அணிக்கு கேப்டன் யாராக இருந்தாலும் வீராட் கோலி தான் தலயாக இருக்கிறார். இதேபோல் சென்னை அணிக்கும் யார் கேப்டனாக இருந்தாலும் தோனி தான் தலயாக இருக்கிறார். இன்று மாலை ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத போகின்றன. இந்த போட்டி பெங்களூர் அணி குவாலிபையர் சுற்றுக்கு போக வாழ்வா சாவா ஆட்டமாகும். தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் யாரிடமும் தோற்காமல் வென்று குவாலிபையர் சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது வீராட் கோலியின் ஆர்சிபி அணி.

RCB vs CSk memes A Memes video created by CSK fans about Mahendra Singh Dhoni and Virat Kohli

இந்த போட்டியை பொறுத்தவரை சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டால் எளிதாக குவாலிபையர் ரவுண்டுக்கு தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூர் அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் போக முடியும். இதனால் பெங்களூர் ஆர்சிபி கிரிக்கெட் ரசிகர்கள் மழை பெய்யக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

RCB vs CSk memes A Memes video created by CSK fans about Mahendra Singh Dhoni and Virat Kohli

இது ஒருபுறம் எனில் சென்னை ரசிகர்களோ வீராட் கோலி மற்றும் தோனி இடையிலான பாசம் மற்றும் நட்பை மையமாக வைத்து மீம்ஸ்க்ளை வெளியிட்டு வருகிறார்கள். பல்வேறு வகையான மீம்ஸ்கள் நேற்று முதலே வெளியாகி வருகிறது. தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி, பிரபு எப்படி அண்ணன் தம்பி போல் இருப்பார்களோ அப்படி இருந்த வீராட் கோலி, தோனியை மையப்படுத்தி, ரீகிரியேசன் செய்து மீம்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.. அந்த வீடியோவில் தோனியை கோலி அடிக்க ஓங்குவது போல் இருக்கும். ரஜினியை பிரபு அடிக்க போகும் போது எப்படி இருக்குமோ அதுபோல் கிரியேட் செய்துள்ளார்கள். இந்த வீடியோ வேறலெவலில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+