RCB Memes: "கண்டா வரச்சொல்லுங்க.. ஹேசல்வுட்டை கையோடு கூட்டி வாருங்க" ஆர்சிபியை வெளுக்கும் மீம்ஸ்!
லக்னோ: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணமாக ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரோபோ சங்கர் கதையை சொல்லி முடிக்கும் போது, விஷ்ணு விஷால் கதவை திறந்து வந்து கராத்தே செய்து கொண்டிருப்பார்.. அதற்கு வில்லன், "ஒரு நிமிஷம் அப்புறம் உன் குரளி வித்தையை காட்டி இருந்தால் ஒரு லட்சம் கொடுத்திருப்பேன்" என்பார். அதில் வரும் விஷ்ணு விஷாலாக இஷான் கிஷனையும், வில்லனாக ஆர்சிபி ரசிகர்களையும் மாற்றி, "உன் குரளி வித்தையை காட்ட நாங்கதான் கிடைச்சோமாடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி மொமண்ட்.

தனுஷ் நடித்த கர்ணன் படத்தில், "கண்டா வரச்சொல்லுங்க" என்று சீர்காழி மாரியம்மாள் பாடி இருப்பார். அதில் கர்ணனான தனுஷ் இருப்பார். அதனை அப்படியே சீர்காழி காளியம்மாளாக ஆர்சிபி ரசிகர்களையும், கர்ணனாக ஹேசல்வுட்டையும் மாற்றி, "கண்டா வரச்சொல்லுங்க" என்று பாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எல்லாம் எங்க நேரம்டா மொமண்ட்.

கைதி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், "யாருணே அவன் சம்பந்தமே இல்லாம எல்லாத்தையும் கலைச்சிட்டான்" என்று கேட்க, அதற்கு வில்லன், "சம்பந்தம் இருக்கு.. அவன் பேரு டில்லி" என்று சொல்வார்.. இதில் வரும் வில்லனாக ஆர்சிபி ரசிகர்களையும், கார்த்தியாக இஷான் கிஷனையும் மாற்றி, யாருணே அவன் சம்பந்தமே இல்லாமல் ஆர்சிபி அணியை அடிக்கிறான் என்று கேட்க, அதற்கு வில்லன், "சம்பந்தம் இருக்கு.. அவன் பேரு பாக்கெட் டைனமோ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

விஐபி படத்தில் அண்ணன் தனுஷ், தனது தம்பியிடம், "ஏன்டா அந்த ஆளு அவ்வளவு திட்டுறாரு.. கீழ அமைதியா இருந்துட்டு இப்போ வந்து வேதம் ஓதுறியா" என்று கேட்பார்.. அதில் வரும் தனுஷாக விராட் கோலியையும், இஷான் கிஷனாக தம்பியையும் மாற்றி, ஏன்டா.. "முதல் மேட்ச்-க்கு பிறகு அவ்வளவு மேட்ச் நடுவுல போச்சு.. அதெல்லாம் விட்டுட்டு எங்களோட குவாலிஃபையர் 1 ஸ்பாட்-அ கெடுக்க ஆடுறியா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தியாகியான மொமண்ட்.

-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications