டிரெய்ன்ல தொலைஞ்ச வேலுவா.. நம்ம ரோகித் சர்மா.. சிவா என்ன இதெல்லாம்.. வேறலெவல் மீம்ஸ் வீடியோ
சென்னை: டிரெய்ன்ல தொலைஞ்ச வேலுவா.. நம்ம ரோகித் சர்மா.. சிவா என்ன இதெல்லாம்.. வேறலெவல் மீம்ஸ் வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.
விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு, விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியவற்றை இணைத்து மீம்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சிவாவிற்கு பதிலாக தவறுதலாக ரோஹித்தை வைத்திருக்கிறார்கள். இதுதான் கடந்த இரண்டு நாட்களாக டிரெண்டிங்காக ஓடிக் கொண்டிருந்தது.

வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் அவரது தம்பி பிரேம்ஜி, நடிகர் சிவா, வைபவ் என சென்னை 28 படத்தில் நடித்த பட்டாளங்கள் நடிப்பார்கள் அதை வைத்து நகைச்சுவைக்காக ஒரு மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ எப்படி இருக்கிறது என்றால், பகவதி படத்தில் நடிகர் விஜய்யின் டீக்கடையில் வடிவேலு வேலை செய்வார். அவரை பார்க்க சிங்கமுத்து வருவார். சிங்கமுத்து உடன் ஒருவரும் வருவார். இருவரையும் பார்த்து பூரித்து போன வடிவேலு, டீ சாப்பிட வாங்க என்று அழைப்பார்.
T68 😅 pic.twitter.com/nwccl8sVIq
— black cat (@Cat__offi) May 26, 2023
அதை விஜய்யும் இரண்டு டீ தானே என்று அனுமதிப்பார். அதன்பிறகு கிராமமே வரும். இதை வைத்து தான் வடிவேலுவை ஏஜிஎஸ் ஆகவும், சிங்கமுத்துவை வெங்கட்பிரவுவாகவும், அவர்களை விஜய் அனுமதிப்பது போலவும் மீம்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். மீம்ஸ் வீடியோவில் சிவாவிற்கு பதிலாக தவறுதலாக ரோஹித் சர்மாவை சேர்த்திருக்கிறார்கள்.அதையும் கிண்டல் செய்துள்ளார். இந்த மீம்ஸ் வீடியோதான் சமூக வலைதளத்தில் இப்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
😄😄😄😄😄 pic.twitter.com/cdehUKVYmd
— இட்லி (@Raittuvidu) May 27, 2023
இந்த சூழலில் வேல் படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு சூர்யா சென்னையிலும், இன்னொரு சூர்யா திண்டுக்கல்லிலும் இருப்பார். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் சென்னை சூர்யா, அவர்களை பார்த்து உங்களுக்கே அவரது உண்மையான பிறந்த நாள் தெரியாது என்று கூறுவார். மிகவும் எமோசனலான அந்த சீனை மீம் வீடியோவாக மாற்றி சிவாவையும், ரோஹித் சர்மாவையும் வைத்து செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.












Click it and Unblock the Notifications