கோவா ப்ளானையே 20 வருசமா போடும் உனக்கு தாய்லாந்து விசா தள்ளுபடி எதற்கு? இணையத்தை கலக்கும் மீம்ஸ்!
சென்னை: தாய்லாந்து செல்ல, இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வந்தாலும் வந்தது, உடனே தாய்லாந்து டூருக்கு மும்முரமாக பிளான் போட தொடங்கிவிட்டார்கள் இந்திய இளைஞர்கள். தாய்லாந்து டூர் மீம்ஸும் சோஷியல் மீடியாவில் பறக்கின்றன.
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்துக்கு சுற்றுலா வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம் என்று தாய்லாந்து அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியர்கள் ஏராளமானோரின் ட்ரீம் டூரிஸ்ட் ஸ்பாட்டாக தாய்லாந்து உள்ளது. தற்போது தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. இந்த ஆண்டில் மட்டுமே 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பால் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாயாவுக்கு பக்கா பிளான்: இளைஞர்களின் விருப்பமான நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் சுற்றுலாவை ஜாலியாக கொண்டாட பல புகழ்பெற்ற நகரங்கள் உள்ளன. பாங்காக், ஹுவா ஹின், ஃபூகெட், பட்டாயா, சியாங் மாய், ஃபை ஃபை தீவு, முயாங் சியாங் ராய், அயுத்தாயா போன்ற நகரங்களுக்குச் செல்லலாம். விசா தேவையில்லை என்ற நடைமுறையால், சில ஆயிரங்கள் மிச்சமாகும் என்பதால் இளைஞர்களுக்கு தாய்லாந்து சுற்றுலா செல்ல சரியான நேரம் இது.
தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற செய்தி வந்ததுமே, ஏராளமானோர், தங்கள் நட்பு வட்ட வாட்ஸ் அப் குரூப்களை தூசி தட்டி, பட்டாயா பயணத்திற்கு பிளான் போட தொடங்கிவிட்டனர். சமூக வலைதளங்களிலும் தாய்லாந்து டூர் மீம்ஸ் பறக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
மீம்ஸ்: தாய்லாந்து என்ன தாம்பரம் பக்கமா இருக்குது? நீங்க வேற ஏன்டா..
நாளைக்கு தேதி 1 ஹவுஸ் ஓனர் செருப்ப கழட்டி அடிப்பாரு வாடகை பணம் குடுக்கலனா..

உனக்கு தள்ளுபடி எதற்கு?: கோவா ப்ளானையே 20 வருசமா போடும் உனக்கு, தாய்லாந்து விசா தள்ளுபடி எதற்கு?

இனிமே வந்தா என்ன, வராட்டி என்ன?: தாய்லாந்து போக இனிமே விசா தேவையில்லையாம் மாப்ள...
இனிமே விசா தந்தா என்ன? தராட்டி என்ன?

கஷ்டமப்பா: இங்க இருக்குற கோவாவுக்கே இத்தனை வருசமா பிளான் போட்டும் போக முடியல..
இதுல எங்க தாய்லாந்து போறது..!

பெட்டி, படுக்கையெல்லாம் கட்டி: இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா வர விசா தேவையில்லைனு சேதி வந்ததுமே, பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு கிளம்பிட்டோம்ல..!

மசாஜ் பண்ண தாய்லாந்தாம்: மூட்டுவலி தைலம் வாங்க துப்பில்ல.. தாய்லாந்து போறாராம் மசாஜ் பண்ண..!












Click it and Unblock the Notifications