Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றே அனுப்பி வைத்தால் தமிழக முதல்வர்.. சசியை ஓட்டும் போஸ்டர்!

சசிகலா மற்றும் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செயும் வகையில் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வளைய வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா மற்றும் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செயும் வகையில் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வளைய வருகின்றன. சசிகலா தரப்புக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி சிலாகித்து வருகின்றனர்.

வாட்சப், டிவிட்டர், பேஸ்புக் என எந்தப்பக்கம் போனாலும் சசிகுரூப்பை ஓட்டியே சாகடிக்கின்றனர் வலை கலைஞர்கள். கற்பனை வளத்தையும் கியேட்டிவிட்டியையும் அவிழ்த்துவிட்டுள்ள இளைஞர்கள் அசத்தும் மீம்ஸ்களையும் வீடியோக்களையும் சசி குரூப்பை வைத்தே செய்து வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.. எம்எல்ஏக்கள் காணவில்லை என்ற போஸ்டர்கள் போய் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் என் வலை தளங்களை அசத்தும் மீம்ஸ்களும் கலாய் வீடியோக்களும் உங்கள் பார்வைக்கு...

சசிகலாவை பெங்களூரு சிறையில் வைத்திருந்தால் அம்மாநில அரசுக்கே ஆபத்து என்கிற ரீதியில் ஒரு போஸ்டர்

டேய் எடப்பாடிங்கறது என்னை வெளில கூப்டுற பேருடா... உள்ளுக்குள்ள ரத்தகளரினு ஒரு பேரு இருக்கு தெரியுமாடா...

ஆத்தாடி பயங்கர கோவக்கார பயலுகளா இருக்காய்ங்களே... இப்படி ஒரு போர்டு எந்த ஊர்லேயும் இருந்திருக்க முடியாது..

அது என்ன கட்சியா இல்லை வாட்ஸ்ஆப் க்ரூப்பா?

புதுக்கோட்டையில் ஆரம்பம்... இதுவரை எம்எல்ஏக்களை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய மக்கள் தற்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டத்தொடங்கியுள்ளனர். அதுவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டி அதற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை நீங்களே பாருங்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+