இப்பக்கூட நாம ஊட்டில தான இருக்கோம்.. ஆனா எனக்கென்னமோ அடுப்புக்குள்ள இருக்க மாதிரியே இருக்கு!
சென்னை: வெயிலுக்கு இதமாக ஊட்டிக்குப் போகலாம் என கனவு கண்டு கொண்டிருந்தவர்களின் ஆசையில் வெயிலைத் தூக்கி ஊற்றி விட்டது சூரியன். தற்போது ஊட்டியிலும் வெயில் சுடுவதைத் தான் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பேசாமல் மலைப் பிரதேசத்தில் பெண் கட்டியிருந்தால், வெயிலுக்கு இரண்டு மாதம் அங்கேயே இருந்து விட்டு வரலாமே என புலம்பும் அளவிற்கு தற்போது தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருகிறது. அதனாலேயே, கோடைகாலத்தில் ஊட்டி, கொடைக்கானல் என எதாவது ஒரு மலைப்பிரதேசத்திற்குப் போகலாம் என்று மக்கள் முன்கூட்டியே திட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் அப்படி நீங்கள் போடும் திட்டத்திற்காக எல்லாம் என்னால் குளிர முடியாது ஊட்டி தன் வேலையைக் காட்டி விட்டது இந்தாண்டு. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் இன்று ஊட்டியில் பதிவாகியுள்ளது. இந்தச் செய்தி, சம்மருக்கு ஊட்டிக்கு போகலாம் என திட்டமிட்டிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொளுத்தும் வெயிலுக்கு தப்பி சில நாட்கள் குளுகுளுவென இருந்துவிட்டு வரலாம் என நம்பி ஊட்டிக்கு சென்றவர்கள், இதுக்கு நம்மூரே பரவாயில்லை என கதறும் அளவிற்கும் அங்கும் வெயில் அடிப்பதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications