"பாகுபலி மாதிரி இல்ல காதுவலி”.. கங்குவா பார்க்க பஞ்சு கொண்டு போங்கப்பா.. கதற விடும் மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும், படத்தில் கத்திக் கொண்டே இருப்பதாக விமர்சித்துள்ளனர். கங்குவா பட இரைச்சலை விமர்சித்து சமூக வலைதளங்லளில் மீம்கள் பறந்து வருகின்றன.

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது 'கங்குவா' திரைப்படம். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டூயோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, "கங்குவா படத்தின் சக்சஸ் மீட் இதே இடத்தில் நடக்கும்.. இந்த பாஸை பத்திரமா வச்சிக்கோங்க" என இசை வெளியீட்டு நிகழ்வில் பேசி இருந்தார். இந்நிலையில், கங்குவா படம் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுதி வருகின்றனர்.

கங்குவா இரைச்சல்: கங்குவா படம் பார்த்த ரசிகர்கள், பெரும்பாலானோர் சொல்லும் விஷயம் படத்தில் சத்தம் அதிகமாக இருக்கிறது என்பதுதான். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையும் இரைச்சலாக உள்ளது, காதில் பஞ்சு வைத்துக்கொண்டு தான் படத்தைப் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கங்குவா இரைச்சலை விமர்சித்து பல மீம்களும் வலம் வருகின்றன.

கங்குவா படத்தின் இசை, வசனங்கள், காதைக் கிழிப்பதாக சமூக வலைதளங்களில் ரவுண்டு வரும் மீம்ஸ், கருத்துகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பாகுபலி இல்லை காதுவலி: இன்னொரு 'பாகுபலி' எடுப்பதாக நினைத்துக் கொண்டு தீராத 'காதுவலி'யை கொடுத்து விட்டது கங்குவா.. ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது.

கங்குவா இல்ல.. கத்துவான்: படத்துல கங்குவா என சில இடத்திலும் கங்கா என சில இடத்திலும் வசனம் வருது. கங்குவா என டைட்டில் வச்சதுக்கு பதிலா கத்துவான் என வச்சிருக்கலாம். அதிக இரைச்சல்.. படத்துக்கு போறவங்க கொஞ்சம் வீட்ல இருந்து பஞ்சு கொண்டு போங்க.. காது பத்திரம்!

kanguva memes suriya

அண்டா, குண்டா, கரண்டியில் இசை: எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரைத்தான். இருக்கற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு.. அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்காராம்ல.

kanguva memes suriya

கத்திக் கத்தியே காது வலி: கத்தியே காதைக் கிழிக்குறானுங்க.. இந்த DSP வேற ரெண்டு பக்கமும் சாவடிச்சுட்டாப்ள.. படம் பூராம் காரணமே இல்லாம கதறிட்டு இருக்கானுங்க.. பார்க்கப்போன ஆடியன்ஸ்க்கு காது வலிதான் மிச்சம்... இதுல ரெண்டாவது பார்ட் வேற வருதாம்..!

kanguva memes suriya

சூர்யாவுக்கு மட்டும் ஏன் இப்படி?: தியேட்டர்ல சூப்பர் ஹிட்டாக வேண்டிய ஜெய்பீம், சூரரைப்போற்று.. ஓடிடில ஹிட்டாகுது. ஓடிடில தள்ளிவிட வேண்டிய எதற்கும் துணிந்தவன், கங்குவா.. தியேட்டர்ல அடி வாங்குது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. கடைசி வரைக்கும் சிங்கம்தானா?

kanguva memes suriya

டிஎஸ்பி இசைக்கருவிகள்: தேவிஸ்ரீபிரசாத் பயன்படுத்திய இசைக்கருவிகள் என, பாத்திரக் கடை ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார் சினிமா விமர்சகர் தமிழ் டாக்கீஸ் புளூ சட்டை மாறன்.

kanguva memes suriya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+