திக்திக்.. "எமோஷன்" ஆன கோலி.. வைட் விட்ட அஸ்வின்.. டிரெண்டாகும் பாகிஸ்தான் - இந்தியா மேட்ச் மீம்ஸ்!
சிட்னி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வென்றதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
இதில் மேட்ச் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்றது. கடைசி பந்தில் அஸ்வின் பவுண்டரி அடிக்க இந்தியா வென்றது. 53 பந்தில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி என்று கோலி அடித்த 82 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

அஸ்வின்
இன்று மேட்சில் அஸ்வின் கடைசியில் விட்ட வைட் மிகவும் வைரலாகி வருகிறது. கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆவார். அதன்பின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நேரத்தில் அஸ்வின் வைட் விடுவார். மிகவும் சமயோஜிதமாக யோசித்து அஸ்வின் வைட் விடுவார். இது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

கடைசி ஓவர்
இந்த போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஓவரில் பல திருப்பங்கள் நடந்தன.
1st - Out
2nd - 1run
3rd - 2run Kohli
4th - no ball + 6
4th - wide
5th - 3runs
5th - wicket
6th - 1run
6th - 1run
என்று கடைசி ஓவரில் பல திருப்பங்கள் நடந்தன. இதை வைத்து என்னடா நடக்குது இங்க என்று பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மீம்ஸ்
காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷகீன் அப்ரிடி இன்று சரியாக பவுலிங் செய்யவில்லை. 4 ஓவர் வீசிய அவர் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. அவர் மொத்தம் 34 ரன்கள் கொடுத்தார். முக்கியமாக இவரின் ஓவரில் கோலி சிறப்பாக ஆடினார். இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ராகுல்
இன்று இந்திய அணி வென்றாலும் கே. எல் ராகுல் சொதப்பியதை மறக்க முடியாது. 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட் ஆனார். கடந்த 2 வருடங்களாக அவர் சரியாக ஆடுவது இல்லை. முக்கியமாக ஐசிசி போட்டிகளில் அவர் மோசமாக சொதப்பி வருகிறார். அவர் இப்படி சொதப்புவதை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இதை வைத்தும் இன்று பல மீம்ஸ் போடப்பட்டன.

கோலி
இன்று மேட்ச் வெற்றிக்கு பின் ரோஹித் கோலியை தூக்கி சுற்றினார். கோலி கண்களிலும் லேசாக கண்ணீர் போல் திரண்டு நின்றது. அதேபோல் ஹர்திக் பாண்டியா எமோஷனலா இருந்தார். இதை வைத்துதான் பலரும் இன்று மீம்ஸ் போட்டு வருகின்றனர். எமோஷனலாக இந்த போட்டி முக்கியமானது என்று மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications