Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil MEME: என்னது பிரக்ஞானந்தா ராக்கெட் விட்டாரா? அப்போ பிரக்யான் ரோவர்? டிரெண்டான மீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் இரண்டு விஷயங்களுக்காக இந்தியா சர்வதேச மேடைகளில் கவனம் பெற்றது. இப்போது இந்த இரண்டு விஷயத்தை அடிப்படையாக வைத்து கலக்கலான மீம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்தியா சார்பாக இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 திட்டம் மூலம் விக்ரம் லேண்டர், பிரக்யான் லேண்டர் இரண்டையும் வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. அதோடு நிற்காமல் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் மனித பொருள் , லேண்டர், ரோவர் என்ற சாதனையையும் இந்தியா தன் வசமாக்கி உள்ளது.

Tamil Meme: A meme is trending on Praggnanandha and Pragyan name confusion

விக்ரம் லேண்டர் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருந்தது. பிரக்யான் ரோவர் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வந்தது. அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்ல தொடங்கி உள்ளது. இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.

இதில் சூரிய வெளிச்சத்தை, குளிரை தாங்க தங்க நிறத்தில் கவர் செய்யப்பட்ட பகுதி இருக்கும். இது 14 நாட்கள் இயங்கும். சோலாரில் இயங்க கூடியது. கடந்த 3 நாட்களுக்கு முன் வெற்றிகரமாக இது களமிறக்கப்பட்டது.

இந்த நிலையில் 14 நாட்கள் இது நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இதுவரை திட்டமிட்ட பணிகள் எல்லாம் சரியாக நடந்து உள்ளன. இனி அவை ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமே பாக்கி. சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.

லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளை செய்யும்.

இப்போது பிரக்யான் ரோவர் கிட்டத்தட்ட 1100 மீட்டர் நகர்ந்து உள்ளது. அதேபோல் இது மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அதன் இணைப்பு, செயல்பாடு எல்லாம் சரியாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செஸ் போட்டி: பிரக்யான் ஒரு பக்கம் நகர இன்னொரு பக்கம் பிரக்ஞானந்தா உலக அளவில் கவனிக்கப்பட்டார். தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் வீரர் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகம் முழுக்க கவனிக்கப்பட்டு வருகிறார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ஆடிய விதம் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், டை பிரேக்கர் வரை சென்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று பைனலுக்கு சென்றார். பைனலில் மேக்னஸ் கார்ல்சன் உடன் நடந்த ஆட்டத்தில் முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிய 3வது சுற்றில் பிரக்ஞானந்தா டை பிரேக்கரில் தோல்வி அடைந்தார்.

இதன் மூலம் அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். அவர் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும் உலக நாடுகள் அவரின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றன.

டிரெண்டிங் மீம்: கடந்த வாரம் இந்த இரண்டு விஷயங்களுக்காக இந்தியா சர்வதேச மேடைகளில் கவனம் பெற்றது. இப்போது இந்த இரண்டு விஷயத்தை அடிப்படையாக வைத்து கலக்கலான மீம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதன்படி , நண்பர் ஒருவர்.. நைட் 1 மணிக்கு கால் பண்ணி 'வாழ்க இப்படியே போயிருமா' என்று கேட்டான்.. உனக்கு ஓவர் ஆகிருச்சு போயி படுனு சொன்னேன். அதெல்லாம் தெளிவாதா இருக்கேன் னு சொல்லிட்டு, 'போனா வாரம் பிரக்ஞானந்தா ராக்கெட் விட்ட மாதிரி, நம்மாலும் பெருசா எதாவது சாதிக்கணும்னு சொன்னான் பாரு.. என்று மீம் போட்டுள்ளார்.

பிரக்ஞானந்தா - பிரக்யான் ரோவர் பெயர் குழப்பத்தை வைத்து இவர் போட்டுள்ள மீம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+