டாக்டர் டீ குடிக்கக்கூடாதுனு சொல்லிட்டாரு.. அதனால சூடா ஒரு இளநீர் கொடுங்கண்ணே!
சென்னை: மதிய வெயிலிலும் சூடாக டீ குடிப்பவர்களை, 'நீங்க எல்லாம் வேற லெவல் பாஸ்' என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நம்மூரில் டீயை பெட்ரோல் என வர்ணிப்பவர்கள் ஏராளம். ஏனென்றால் வண்டிக்கு எப்படி பெட்ரோல் போட்டால்தான் ஓடுமோ, அதேபோல் டீ குடித்தால்தான் அவர்களுக்கு வேலையே நடக்கும். காலை, மாலை, மதியம், இரவு என நேரம், காலம் பார்க்காமல் டீ குடிப்பவர்களும் நம்மூரில் உண்டு. அதனால்தான், வீதிக்கு ஒரு டீக்கடை என்ற நிலை மாறி, விதவிதமான பெயரில் அடுக்கடுக்காக டீக்கடைகள் முளைத்து வருகின்றன.

ஆனால், ஆளாளுக்கு ஒரு ஃபீலிங் என இந்த டீ காதலர்களை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்து செல்ல முடிவதில்லை. காரணம், குழாயைத் திறந்தாலே கொதிக்கும் நீர் கொட்டும் மதிய நேரத்திலும்கூட, இவர்கள் கடமையே கண்ணாக டீக்கடையில் சூடாக டீ குடிப்பதைப் பார்க்கும் போது, ஆச்சரியம்தான் மேலோங்குகிறது.
இப்படிப்பட்ட வெறித்தனமான டீ காதலர்களைத்தான் தற்போது மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'நீங்க எல்லாம் வேற லெவல் பாஸ்' என அவர்களுக்கு டீ மீது உண்டான காதலை நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில டீ மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










Click it and Unblock the Notifications
