வருசம் புல்லா திட்றது.. Teachers day வந்தா மட்டும் நீங்கதான் என் தெய்வம்னு உருட்டுறது
சென்னை: ஆசிரியர் தினம் என்பதால் வழக்கமான நக்கல், நையாண்டியோடு, ஆசிரியர்களின் மகத்துவத்தைக் கூறுவது போன்ற கருத்தான மீம்ஸ்களையும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு நபருமே ஒரு வகையில் நமக்கு ஆசிரியர்கள் தான். ஏனென்றால் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் நமக்கு ஒரு பாடத்தைக் கற்று தந்துவிட்டுத் தான் போகிறார்கள். எனவே ஆசிரியர் தினமான இன்று பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, தங்களுக்கு வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக் கொடுத்த முன்னாள் காதலிகள் வரை அனைவருக்கும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வழக்கம் போல் வெறும் கலாய்ச்சிபையோடு கடந்து விடாமல், ஆசிரியர்களின் மகத்துவத்தைக் கூறுவது போல், 'ஒருநாள் டீச்சரா இருந்து பசங்களை சமாளிச்சுப் பாருங்க.. அப்போதான் தெரியும் நாங்க படுற கஷ்டம் உங்களுக்குப் புரியும்' என மீம்ஸ் வடிவத்தில் யதார்த்தத்தைப் பகிர்ந்துள்ளனர்.
கூடவே, 'இன்னைக்கு ஏத்தி விட்ட ஏணி.. எங்களுக்காக உருகிய மெழுகுவர்த்தினு சொல்றவங்களாம் யாரு?..' என்பது மாதிரியான மீம்ஸ்கள் மாணவர்களின் மனநிலையை பிரதிபலிப்பது மாதிரி நகைச்சுவையாக உள்ளன.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications