என்ன சோனமுத்தா இப்படி ஆகிடுச்சு.. சொகுசு காரில் போன யூடியூபருக்கு கடைசியில் நடந்த ட்விஸ்ட்
சென்னை: தனது காரின் டயர் ஒன்று பஞ்சரான நிலையில், அது சம்பந்தமாக யூடியூபர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அந்த வீடியோவின் இறுதியில் நடந்த கிண்டலான சம்பவம் தான் வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட காரணமாக உள்ளது.
இன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகப்படியான காணொளிகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அதிகம் பேரால் பகிரப்படுகின்றன.முன்பெல்லாம் மக்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தான் புரணி பேசுவார்கள்.. அவர் இப்படி, இவர் அப்படி என்று வீட்டு முகப்பில் உட்கார்ந்து பேசுவார்கள்.

டீக்கடைகளில் உட்கார்ந்து பேப்பர் படித்தபடி, இந்த அமைச்சர் இப்படி ஏன் பேசினார். அந்த அமைச்சர் இவ்வளவு அடிச்சிட்டாராமே, இவ்வளவு பேர் கூடினாங்க தெரியுமா? எங்க தலைவர போல வருமா... எங்க தலைவர் தான் கெத்து, நடிகைகள் பற்றி என்றால், கிசு கிசு விரும்பி படிப்பார்கள்.. இவர் அப்படி போனாரா.. இவர் இப்படி போனாரா.. அதையே வரலாறுகளாக பேசி பொழுதை கழிப்பார்கள்.
ஆனால் அதே வேளையை சமூக ஊடகங்களில் முகம் தெரிந்த, தெரியாதவர்களிடம் செய்கிறார்கள்.. தங்களுக்கு பிடித்த, தங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் வீடியோவாக, கருத்தாக வந்தால், அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். அதேநேரம் சமூக வலைதளங்களில் சோசியல் மீடியா இன்புளுயன்சர்கள் என்ற ஒரு வட்டம் உருவாகி உள்ளது. இவர்கள் தான் சமூக வலைதளங்களில் எதை பேச வேண்டும்.. எதை பேசக்கூடாது என்பதை முடிவு செய்கிறார்கள். சிலர் யூடியூபர்களாகவும் மாறி உள்ளனர். அப்படி ஒருவர் தான் தனது காரின் டயர் ஒன்று பஞ்சரான நிலையில், அது சம்பந்தமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் காரில் உள்ள டிஸ்பிளேவில், டயர் பஞ்சர் என்று சிக்னல் காட்டுகிறது.. அதனை பார்த்த யூடியூபர் என்னாச்சு என்று நான்கு டயர்களையும் போய் பார்த்துள்ளார் யூடியூபர். ஆனால் பஞ்சர் ஆகவில்லை. சரி என்னடா என்று திரும்பவும் காரில் ஏறி ஸ்டார்ட் செய்யலாம் என பார்த்தால், ஸ்டெப்னி டயர் பஞ்சர் என்று வந்துள்ளது. உடனே காரை விட்டு இறங்கிய அவர், நண்பரை அழைத்துக் கொண்டு நேராக ஒர்க் ஷாப் போயிருக்கிறார்.
End Twist....😁😁😁😁 pic.twitter.com/aAyoDBbQvb
— நாடு எங்கபோகுது? (@Piramachari) January 31, 2024
போகும் வழியில் நண்பரின் வண்டியில் பெட்ரோல் இல்லை.. உடனே நண்பரை திட்டியபடி நடந்தபடி டயரை உருட்டிக்கொண்டே ஒர்க்ஷாப் போயிருக்கிறார். பஞ்சர் ஒட்டிவிட்டு வந்து காரின் பின்னால் ஸ்டெப்னியை மாற்றி உள்ளார். கடைசியில் காரை எடுக்கும் போது தான் யோசனை அவருக்கு வந்துள்ளது. ஸ்டெப்னியை கழட்டி உள்ளே வைத்துவிட்டு வண்டியில் போய் பஞ்சர் போட்டிருக்கலாமே எதற்காக வண்டியில இருந்து இறங்கி இவ்வளவு போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்.. அய்யோ சூனாபானா இப்படி ஆயிடுச்சே என்று புலம்பாத குறையாக வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ தான் இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications