“தலைல பூச்சி.. ஜிப் போடல.. சட்டைல இங்க்”.. இதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா 90ஸ் கிட்ஸ்?
சென்னை: ஏப்ரல் ஃபூல் செய்து மகிழ்வதில், 90ஸ் கிட்ஸ்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என மீம்ஸ் போட்டு மார்தட்டிக் கொள்கின்றனர் நெட்டிசன்கள்.
என்னதான் மீம்ஸ்களின் முக்கியமான கண்டெண்ட்டாக இருந்தாலும், 90ஸ் கிட்ஸ் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்பது, அதை நிஜமாக அனுபவித்து வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலும் குறிப்பாக, ஏப்ரல் முதல் தேதி வந்து விட்டால், நண்பர்களை, வீட்டில் இருப்பவர்களை, அக்கம்பக்கத்தாரை என எல்லோரையும் எதையாவது சொல்லி, முட்டாளாக்கினால்தான், அந்த நாளே அவர்களுக்கு திருப்தியாக முடியும்.

எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும், தப்பித்தவறி யாராவது நம்மை ஏமாற்றி விட்டால் அவ்வளவுதான், திரும்பவும் அவர்களை ஏமாற்றினால்தான் 90ஸ் கிட்ஸ்க்கு தூக்கமே வரும். அந்தளவிற்கு ஏப்ரல் முதல் தேதி என்பது அவர்களுக்கு மிகவும் பொழுதுபோக்கான கொண்டாட்டமான நாள். ஏமாற்றுகிறேன் பேர்வழி என பெரியவர்களிடம் அடி வாங்கிய வரலாறும்கூட உண்டு.
'யார் என்ன சொன்னாலும், இன்னைக்கு நம்பவே கூடாது..' என மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே கழிந்த அந்தநாட்கள் மிகவும் இனிமையானவை. வார்த்தைகளால் விளையாட்டாக ஏமாற்றுவது ஒருபுறம் என்றால், சட்டையில் பேனாவால் இங்க் எறிவது மற்றொரு வகைக் கொண்டாட்டம். நிச்சயம் இந்தத் தலைமுறை இந்தக் கொண்டாட்டங்களை, மகிழ்ச்சியை எல்லாம் மிஸ் செய்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படியாக ஏப்ரல் முதல் தேதியான இன்று, மீண்டும் தங்கள் குழந்தைப் பருவத்திற்கே போய் விட்டனர் 90ஸ் கிட்ஸ் என்பது அவர்களும் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது. இதோ சமூகவலைதளங்களில் நம் கண்களில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications