நா செத்தாலும் பரவாயில்லன்னு உன் சமையலை ஏன் சாப்பிட்டேன் தெரியுமா? ஏன்னா நீ என் தங்கச்சி!
சென்னை: வீட்டிற்குள் அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்களுடன் உண்டாகும் (உண்டாக்கிக் கொள்ளும்) அன்புச் சண்டைகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
நரம்பில்லாத நாக்கு எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கு நம் நெட்டிசன்களே நல்ல உதாரணம். ஆம், ரக்ஷாபந்தன் என கடந்த மாதம் அண்ணன், தங்கை பாசத்தில் உருகியவர்கள், இப்போது சகோதர பாசத்தை வேற லெவலில் பிராக்டிகலாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக லிட்டில் பிரின்சஸ் வீட்டில் சமைத்தால், வீடு எப்படி அல்லோகலப்படும் என்பதை நகைச்சுவையாக ரசிக்கும்படி மீம்ஸ் ஆக்கி இருக்கின்றனர். வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது மாதிரி, எல்லோர் வீடுகளிலும் உள்ள பிரச்சினை இது என்பதால், தங்கச்சி, அக்கா சமையலால் பாதிக்கப்பட்ட உடன்பிறந்தோர் எல்லோரும் தங்கள் மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்கும் ஒரு வடிகாலாக இந்த மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 'பாசமலர்கள்' மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











Click it and Unblock the Notifications
