கொஞ்சம் வெளில வரலாம்ல.. ரொம்ப வந்துட்டேன்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுத்தான் திரும்ப வருவேன்!
சென்னை: சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழையும், மற்ற மாவட்டங்களில் வெயிலும் கலந்து கட்டி அடித்து வருவதை வைத்து கலக்கலான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்த வருடம் செப்டம்பர் வந்தும் இன்னமும் ஓவர் டியூட்டி பார்த்து வருகிறது சூரியன் என தமிழக மக்களே புலம்பும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களைப் பார்த்து அலறும் மக்கள், இந்தாண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என ஆரம்பித்து இப்போது செப்டம்பர் வரை, 'ஷ்ஷப்பா முடியல..' என வெயிலால் கதறி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் விதிவிலக்காக, பகலில் வெயிலும், மாலையில் மழையும் என கலந்து கட்டி அடித்து வருகிறது வானிலை. வெயில் அடிக்குதுனு நம்பி வெளியில் சென்றால், திடீரென மழை கொட்டி திணற வைத்து விடுகிறது என சென்னை மக்கள் புலம்பி வருகின்றனர்.
மற்ற மாவட்டங்களில் வெயிலை நினைத்து மட்டும் கவலைப்பட, சென்னை மக்களோ இரண்டை நினைத்தும் எதற்கு கவலைப்படுவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். இப்படியாக ஒருபுறம் மக்கள் நிஜத்தில் புலம்பிக் கொண்டிருக்க, மறுபுறம் நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ் போட்டு வெயிலோடும், மழையோடும் விளையாடி வருகின்றனர். சென்னையில் ஜில் கிளைமேட் என மீம்ஸ் போட்டு, மற்ற மாவட்டங்களை வெறுப்பேற்றியும் வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications