“நீங்க சூனாபானாவா இல்ல கிரிகாலனா?”... இந்த போட்டோவை பாருங்க சிரிப்பு கன்பார்ம்!
வடிவேலு பட கதாபாத்திரங்களை வைத்து நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள பிறந்தநாள் மாத கணிப்பு ரசிக்கும்படியாக உள்ளது.
சென்னை: வடிவேலு பட காமெடி கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள பிறந்தநாள் மாத கணிப்பு மீம்ஸ் ஒன்று ரசிக்கும்படியாயும், கூடவே வயிறு வலிக்க சிரிக்கும்படியாயும் உள்ளது.
மகிழ்ச்சி, சோகம், அழுகை, ஏமாற்றம், காதல், நகைச்சுவை என வாழ்க்கையில் அனைத்து உணர்ச்சிகளுக்கும் பாடலைக் கொடுத்தவர் இளையராஜா என்றால், அவை அனைத்திற்கும் தனித்தனியே ரியாக்ஷனைக் கொடுத்தவர் வடிவேலு . அதனால்தான் அவரை மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் ராஜாவாக மீமர்கள் கொண்டாடுகிறார்கள்.
எந்த மீமுக்கும் பொருத்திப் போகும் சிறப்பம்சம் கொண்டது வடிவேலுவின் காமெடிகள். அவரது ஒவ்வொரு கதாபாத்திரமுமே தனித்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் அவரது கதாபாத்திரங்களை வைத்து வித்தியாசமான பிறந்தநாள் மாத கணிப்பு ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இது வேற மாதிரி கலாய்
அவ்வப்போது ஜாலியாக ஒவ்வொரு உணவுப் பொருட்களை வைத்து, பூக்களை வைத்து என வித்தியாசமாக பிறந்தநாள் மாத கணிப்புகள் சமூகவலைதளங்களில் வைரலாகும். அவற்றை யார் உருவாக்குவார்கள் என்பதெல்லாம் தெரிவதில்லை. ஆனால், கமல் பட டயலாக் மாதிரி, 'அவற்றை ஆராயாமல் அனுபவித்தால்' நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது பகிரப்பட்டு வரும் வடிவேலு மீம்ஸும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

வண்டுமுருகன்
இதில் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் சூனாபானா மாதிரியாம். அதாகப்பட்டது, 'நான் அப்டியாக்கும், இப்டியாக்கும்' என வாயில் உதார் விடுவார்கள். ஆனால் அசால்ட்டாக அவர்களை மற்றவர்கள் தங்கள் சைக்கிளில் டபுள்ஸ் பழக பயன்படுத்தி, கீழே குப்புற தள்ளி விடுவார்கள். இதே மாதிரி பிப்ரவரிக்கு வண்டுமுருகன். சொல்லாமலே புரிந்திருக்கும் வண்டுமுருகனைப் பற்றி.

ஸ்னேக் பாபு
இந்த வரிசையில் மார்ச்சுக்கு ஸ்னேக் பாபு, ஏப்ரலுக்கு கிரிகாலன். மே மாதம் பிறந்தவர்கள் நாய் சேகர் மாதிரியாம். 'ஏய் என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..' என அவ்வப்போது கேட்டுக் கொண்டாலும், சந்தேகமேயில்லை நீ்ங்கள் ஒரு காமெடி பீஸ் தான் என 'நாங்க சொல்லலைங்க.. இந்த மீம்ஸ்ல சொல்றாங்க..' (கிரேட் எஸ்கேப்...)

பாடி சோடா
அப்படியே ஜூன் மாதம் பிறந்தவர்கள் கைப்புள்ள, ஜூலையில் பிறந்தவர்கள் வீரபாகு, ஆகஸ்ட்டில் பிறந்தவர்கள் பாடிசோடா, செப்டம்பரில் பிறந்தவர்கள் முருகேசா, அக்டோபரில் பிறந்தவர்கள் அம்ப்ரலா என வரிசை செல்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் நவம்பர், டிசம்பரில் பிறந்தவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் தான்.

ஸ்டைல்பாண்டி
நவம்பரில் பிறந்தவர்களுக்கு நேசமணியைக் கொடுத்திருக்கிறார்கள். மிரட்டி உருட்டி வேலை வாங்கும் காண்ட்ராக்டராக இருந்தாலும், கூடவே இருந்து நடுமண்டையில் சுத்தியலால் அடிப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் போலும். இதேபோல் டிசம்பரில் பிறந்தவர்களுக்கு ஸ்டைல்பாண்டி.

சிரிப்பு நிச்சயம்
சீரியசாக எடுத்துக் கொள்ளாமல், ஜாலியான விசயமாக இதை எடுத்துக் கொண்டு, உங்களது மற்றும் உங்களுக்குத் தெரிந்தவர்களது பிறந்தநாள் மாதங்களை வைத்து இந்த மீம்ஸை ஒப்பிட்டு பாருங்களேன். நிச்சயம் சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகி விடும். நிச்சயம் இந்த மீம்ஸ் உங்களது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications