நீங்கதான் பைக்ல ஸ்பீடா போறதா? ஆ.. அந்த வாசன் நான் இல்லைங்க.. மோடி - வாசன் சந்திப்பு.. பரபர போட்டோ
சென்னை: பிரதமர் மோடி - ஜி கே வாசன் இடையிலான சந்திப்பு தொடர்பான மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன்.. இவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வந்தன. கடந்த வருடம் கூட இவர் டெல்லி சென்று இருந்தார். முக்கியமான பல விஷயங்களை பேசுவதற்காக இவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டது.
டெல்லியில் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தவர் நீண்ட நேரம் அவரிடம் ஆலசோனை செய்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன், தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது.

பாஜகவுடன் ராசியாக இருக்கும் இவர் அமைச்சர் பதவியை கேட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு பர்சனலாக இவரை மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடியின் குட் புக்கில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் மோடியும் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கலாமே என்ற திட்டத்தில் இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் கடைசியில் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக இவர்கள் கைகோர்த்து உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
இதற்காக நேற்று முதல்நாள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு எதிராக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் ஜி கே வாசனும் கலந்து கொண்டார்.
நிகழ்விற்கு பின் இரவு விருந்து எல்லோருக்கும் அளிக்கப்பட்டது. அதில் மோடி - வாசன் இருவரும் சந்தித்துக்கொண்டனர். சில நிமிடங்கள் இவர்கள் அன்பாக பேசினார்கள். ஜி கே வாசன் உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி - ஜி கே வாசன் இடையிலான சந்திப்பு தொடர்பான மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி மோடி ஜி கே வாசனை பார்த்து.. பைக்ல ரொம்ப வேகமா போறீங்களாமே.. என்று கேட்பது போலவும் அய்யயோ அந்த வாசன் நான் இல்லஜி என்று ஜி கே வாசன் சொல்வது போலவும் மீம் போட்டுள்ளனர்., இந்த கற்பனை உரையாடல் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. டிடிஎப் வாசனை மையமாக வைத்து இந்த மீம் போடப்பட்டு உள்ளது.
TTF வாசன் என்பவர் Twin Throttlers என்று யூ டியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 வருடமாக இந்த டிராவல் விலாக் பக்கத்தை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் யூ டியூபில் இருக்கிறார்கள். பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவதுதான் இவரின் வழக்கம்.
சமீபத்தில் லடாக் சென்றதை இவர் வீடியோவாக போட்டு இருந்தார். பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது ஆகியவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார். அதே சமயம் இவர் வேகமாக செல்வது, சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார் உள்ளது. 2கே கிட்ஸ் தொடங்கி பைக் மீது ஆர்வமாக இருக்கும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் சென்னைக்கு இவர் சில பொருட்கள் வாங்க வந்த போது அதை பற்றி முன்கூட்டியே வீடியோ போட்டு இருந்தார். இதையடுத்து அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.
சாலை விதிகளை மதிக்காமல் இவர் வேகமாக ஓட்டுவதாக இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன. இப்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications