”டெல்லி கோட்டையை தகர்ப்பியா?” ஆஸி. அணியை வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்.. டிரெண்டிங் மீம்ஸ் இதோ!
இந்தியா - ஆஸி. இடையிலான 2ம் நாள் ஆட்டத்தை மீம்ஸ் வடிவில் பார்க்கலாம்.
சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் டிரெண்டிங் மீம்ஸ்களை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
3ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சவாலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் சிக்கி சரிந்தனர்.

வின்னிங் ஸ்ட்ரீக்
இந்த நிலையில் மூன்றாம் ஆட்டத்தினை கொண்டு இந்திய ரசிகர்கள் ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர். அது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதில் சிலவற்றை பார்க்கலாம். கடந்த முறை இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது, 34 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா தோல்வியடையாத மைதானமான காபா கோட்டையை இந்திய அணி தகர்த்தது. இதற்கு பதிலடியாக 36 ஆண்டுகளாக டெல்லியில் தோல்வியடையாத இந்திய அணியை வீழ்த்துவோம் என்று ஆஸி. ரசிகர்கள் பேசினர். அதற்கேற்ப முதல் இன்னிங்ஸிலும் ஆஸி. அணி விளையாடியது. ஆனால் அடுத்த 58 ரன்களிலில் ஆஸி. அணி சுருண்டது. அதனை கிண்டல் செய்யும் வகையில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் வரும், செப்பல்ஸ் பிஞ்சிரும் காமெடியை வைத்து உருவாக்கப்பட்ட மீன் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வார்னர் - அஸ்வின்
அதேபோல் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணியின் ஸ்டீவ் ஸ்மித், அஸ்வினிடம் வீழ்ந்தார். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் அஸ்வினே அவரின் விக்கெட்டை வீழ்த்தினர். எப்போதும் அஸ்வினிடம் வார்னர் ஆட்டமிழந்து வந்த சூழலில், 2வது இன்னிங்ஸில் கன்கஷன் வீரர் களமிறக்கப்பட்டார். அதனால் வார்னருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திலாம் என்று வார்னர் சொல்வது சிவா மனசுல சக்தி படத்தில் வரும் ஜீவா - சந்தானம் காமெடியை வைத்து உருவாக்கப்பட்ட மீம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஸ்வினின் விக்கெட்
பின்னர் இந்தியா வருவதற்கு முன்னதாக அஸ்வின் பந்துவீச்சு பற்றிய பயம் ஆஸ்திரேலிய வீரர்களின் மனதில் இருந்தது. இதற்காகவே அஸ்வின் போன்றே பந்துவீசும் நபரை கொண்டு ஆஸி. அணி பயிற்சி மேற்கொண்டது. இருப்பினும் ஒரே ஆட்டத்தில் இருமுறையும் அஸ்வினிடமே ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தார். இப்படி ஒரே வீரரிடம் ஆட்டமிழந்தால், கிரிக்கெட்டில் "Bunny" என்று கிண்டல் செய்யப்படும். அதனை கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் மாதவன் - சிம்ரன் இடையிலான ரொமான்ஸ் காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

கேஎல் ராகுல்
அதேபோல் இந்திய அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல் எந்த பிரஷரும் இல்லாத சூழலில் கூட எளிதாக ஆட்டமிழக்கிறார். இதனை கிண்டல் செய்யும் வகையில், ரஜினி முருகன் திரைப்படத்தில் வரும், வண்டி ஓட்ட வருமா? என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் கிடைக்குமா? என்று மறுகேள்வி கேட்பார். அதனை வைத்து கேஎல் ராகுல், என் விக்கெட் வேணுமா? என்று கேட்பது போலவும், கிடைக்குமா என்று ஆஸி. அணி மறுகேள்வி கேட்பது போலவும் உருவாக்கப்பட்ட மீம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கில்லி கோலி
அதேபோல் இன்றைய போட்டியில் விராட் கோலி 30 ரன்கள் சேர்த்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 25 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனை பாராட்டும் வகையில் கில்லி படத்தில் வரும் விஜயை, நடிகர் மயில்சாமி பாராட்டும், கில்லி மேடம் கில்லி என்று மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications