”நைட் வாட்ச்மேன் இல்லடா.. உனக்கு நைட்மேர்” ஆஸியை அசால்ட் செய்த இந்தியா.. தெறிக்கும் மீம்ஸ் இதோ!

இந்தியாவின் வெற்றியை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: ஆஸ்திரேலியா அணியை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியதை வைத்து, ரசிகர்கள் ரசிக்கும்படியான பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் முக்கியமான மீம்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 92 ரன்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சுருண்டனர்.

மொத்தமாக முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் மகிழ்ச்சியில் உள்ள ரசிகர்கள், சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கத்தை முறியடிக்க யாராலும் முடியாது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நானும் ரவுடிதான் ஜடேஜா

நானும் ரவுடிதான் ஜடேஜா

பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன்பாக அஸ்வினை எதிர்கொள்வது எப்படி என்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பேசி வந்தனர். இவ்வளவு ஜூனியர் வீரரான அக்சர் படேலின் திறமையை பற்றி கூட ஆஸ்திரேலிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது பேசினர். ஆனால் அனுபவ வீரரான ஜடேஜா பற்றி ஆஸி. வாய் திறக்கவே இல்லை. ஆனால் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜடேஜா வெளுத்து வாங்கினார். ஆஸி. ஜடேஜாவை பற்றி பேசாதது பற்றி நான் ரவுதான் படத்தில் வரும் பார்த்திபனை கொண்டு ரசிகர்கள் வெளியிட்டுள்ள மீம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

நைட் வாட்ச்மேன்

நைட் வாட்ச்மேன்

முதல் நாள் முடிவதற்கு 20 நிமிங்களே இருந்ததால், புஜாரா களமிறங்காமல் நைட் வாட்ச்மேன் என்று அழைக்கப்படும் அஸ்வினை இந்திய அணி களமிறக்கியது. ஆனால் அஸ்வினோ தனது உயரத்தை பயன்படுத்தி ஆஸி. அணியின் சுழற்பந்துவீச்சாளரை மடக்கி மடக்கி சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். இதனை வைத்து என்னை நைட் வாட்ச்மேன் என்று நினைச்சீங்களா, உங்களுக்கு நைட்மேர்டா தான் என்று வடிவேலுவை வைத்து உருவாக்கப்பட்ட மீம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜயாக வரும் ஷமி, சதீஷாக கோலி

விஜயாக வரும் ஷமி, சதீஷாக கோலி

இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஷமி பேட்டிங் செய்த போது, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 47 பந்துகளை எதிர்கொண்ட ஷமி, அதிரடியாய் விளையாடி 37 ரன்கள் சேர்த்தார். அதில் மூன்று சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ள 24 சிக்சர்கள் என்ற சாதனையை ஷமி முறியடித்தார். 25 சிக்சர்களை ஷமி விளாசியதை வைத்து, கத்தி படத்தில் வரும் விஜயாக ஷமியையும், சதீஷாக கோலியை வைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

டெய்லண்டர்கள்

டெய்லண்டர்கள்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு அணிகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இந்திய வீரர்கள் வேகமாக விக்கெட் வீழ்த்திவிடுவர். ஆனால் டெய்லண்டர்களை விக்கெட் வீழ்த்த முடியாமல் அதிக ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விட்டுக்கொடுப்பார்கள். ஆனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் டெய்லண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனை வைத்து தெறி படத்தின் பேசும் விஜயை வைத்து உருவாக்கப்பட்ட மீம் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பகவதியாக மாறிய முர்ஃபி

பகவதியாக மாறிய முர்ஃபி

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அறிமுக பந்துவீச்சாளர் டாட் முர்ஃபி 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இளம் வீரர் என்ற சாதனையை டாட் முர்ஃபி படைத்தார். இந்திய வீரர்கள் ஒரே பந்துவீச்சாளரிடம் ஆட்டமிழந்ததை கிண்டல் செய்யும் வகையில், பகவதி படத்தில் வரும் விஜய் பேசும் வசனமான "சொந்த ஊர்னு சொல்ற.. ஒரேயொரு டீ தான" என்ற வசனத்தை வைத்து அறிமுக வீரர்னு சொல்ற, விக்கெட்ஸ் தான.. எடுத்துட்டு போகட்டும் என்று சொல்வது போல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+