லைப்ல வர்ற ப்ராப்ளம்..4 ஜென்மத்துக்கு கல்யாணம் நடக்காது போலயே..கலங்கும் 90 கிட்ஸ்
கல்யாணம் காதல் என்பது 90 கிட்ஸ்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது. அவர்களை வைத்து பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.
சென்னை: கல்யாணமும் காதலும் எல்லோருக்கும் எளிதாக வாய்த்து விடுவதில்லை. 90 கிட்ஸ்களுக்கு பல பரிகாரங்களை செய்தும் கல்யாணம் கைகூடி வருவதில்லை. என்னதான் கலாய்தாலும் எதையும் தாங்கும் இதயம் உள்ள தங்கங்கள்தான் 90 கிட்ஸ், இன்றைக்கு மீம்ஸ் கண்டென்ட் அதிகம் கொடுப்பதும் 90 கிட்ஸ்தான். அவர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள சில மீம்ஸ்கள் நமது ஒன் இந்தியா நேயர்களுக்காக தருகிறோம்.
குடும்பம் என்றாலே பிரச்சினைதான். வீட்டிற்கு வீடு வாசப்படிதான், அதை புரிந்து கொண்டவர்கள் எளிதாக வாழ்க்கை நடத்துகின்றனர். பிரச்சினையை சமாளிக்க முடியாதவர்கள்தான் புலம்புகின்றனர். கல்யாணம் ஆன 90 கிட்ஸ் ஒருவரின் புலம்பல் இது. ஸ்கூல் படிக்கும் போது மேத்ஸ்ல இருந்த பிராப்ளம் விட இப்போ லைப்ல பிராப்ளம் அதிகமாக இருக்கே திருநா..

கையிலே வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு மாத சம்பளதாரர்களுக்கு செலவுகள் வரிசை கட்டி நிற்கும். 15ஆம் தேதியே பணம் பற்றாக்குறையாகி விடும். மாச கடைசியில பணப்பிரச்சினை எல்லா வீட்லையும்தான் இருக்கு என்பதை சொல்கிறது இந்த மீம்ஸ்.

90 கிட்ஸ்களுக்கு காதலி கிடைப்பது பெரிய விஷயம். அதுவும் அவசரத்திற்கு போன் செய்தால் அதை புரிந்து கொள்ளாத பூமர் அங்கிள்கள் இருக்கத்தான் செய்கின்றனர். விடிஞ்சா கல்யாணம் என்னைய கூட்டிட்டிப்போ என்று காதலி சொல்ல.. வேற படம் பாரு அதுக்காக எல்லாம் வெளியில கூட்டிட்டு போக முடியாது என்கிறார் இந்த 90 கிட்ஸ் காதலன்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ரோசப்பட்டால் ஒன்றும் நடக்காது. பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்ற வண்டியை எளிதாக ஓட்ட முடியும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு அதை சொல்லும் வகையில் இந்த மீம்ஸ் உள்ளது.

கோபம் அருவி மாதிரி கொட்டுது..ஹோம் லோன், இஎம்ஐ, வீட்டு செலவு பற்றி நினைக்கும் போது பொங்கி வரும் கோபம் டப்புன்னு ரோஷம் கெட்டு போய் விடுகிறது என்கிறார் இந்த அனுபவசாலி 90 கிட்ஸ்.

பிப்ரவரி 14 காதலர் தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. எல்லோரும் ஆள் ஆளுக்கு ஆள் வைத்துக்கொண்டு சந்தோஷமாக என்ஜாய் செய்தனர். ஆள் கிடைக்காத 90 கிட்ஸ் ஒருவர் போட்ட மீம்ஸ் ஆறுதலுக்காக..
ஆள் இல்லைன்னா பிப்ரவரி மாதம் மட்டும்தான் கஷ்டப்படனும். ஆள் இருந்தா எல்லா மாதமும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கும் பல 90 கிட்ஸ்களுக்கும் 80 கிட்ஸ்களுக்கும் கல்யாணம் நடக்காமல் சிக்கலாகவே உள்ளது. அதற்கு ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்யச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். கிணத்துல கல்லு போடதே கல்யாணம் நடக்காது என்று பெரியவர்கள் சொன்னார்கள் நான்தான் கேட்கலை.. 4,5 கல்லு போட்டேன்..4 ஜென்மத்துக்கு கல்யாணம் நடக்காது போலயே என்று புலம்புகிறார் 90 கிட்ஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications