கருங்காலி மாலை போட்டா கஷ்டமே வராதுனு ஒரு கூட்டம் திரிஞ்சதே.. அதை பார்த்தீங்களா?
சென்னை : சமூகவலைதளப் பக்கங்களில் டிரெண்டிங்கில் உள்ள டாபிக்குகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
சமூகவலைதளப் பக்கங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர்களுக்கு தூத்துக்குடி கொத்தனாரைப் பற்றித் தெரியாமல் இருக்காது. ஆனால் அப்படி ஒரு மோசமான பாடல் வைரலானதால், நிஜமாகவே அந்த ஊரில் கொத்தனார் வேலை பார்ப்பவர்கள் எவ்வளவு சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது சமூகவலைதளப் பக்கங்களைப் பார்த்தாலே தெரிகிறது.

"நான் பாட்டுக்கு தூத்துக்குடில கொத்தனார் வேலை பார்த்துட்டு இருந்தேங்க.. தூத்துக்குடி கொத்தனார்னு ஒரு பாட்டை போட்டு, இப்ப என்னை வெளில தலை காட்ட முடியாதபடி பண்ணிட்டாங்க" என அவர்கள் தங்களது வேதனைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், "வீடு கட்டணும் நல்ல கொத்தனார் இருந்தா சொல்லுனு கேட்டா.. தூத்துக்குடி கொத்தனார் வேணுமானு கேட்குறான் சார்" என்றும் புலம்பியுள்ளனர்.
அதேபோல், "கருங்காலி மாலை போட்டா கஷ்டமே வராதுனு ஒரு கூட்டம் திரிஞ்சதே.. அதை பார்த்தீங்களா? " என முன்பு டிரெண்டிங்கில் இருந்த டாபிக்குகளையும் கலாய்த்து தற்போது மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications